சன் டிவி சீரியலில் ஒன்றிணைந்து நடித்துள்ள விக்ரமன் மற்றும் பாவனி.! அட, இவர் விஜய் டிவி சீரியல்ல கூட நடிச்சிருக்காரா..

vikraman
vikraman

விஜய் டிவியில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான விக்ரமன் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறார் தற்பொழுது பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி துவங்கப்பட்ட ஐந்து வாரங்களை கடந்து உள்ள நிலையில் ஜிபி முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, விஜே மகேஸ்வரி உள்ளிட்டு ஐந்து பேரை நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் 16 போட்டியாளர்களுடன் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது மேலும் இந்நிகழ்ச்சியில் விக்ரமுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இவர் தொகுப்பாளராக பணியாற்றி பிறகு 2016ஆம் ஆண்டு வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இந்த சீரியலை சுந்தர் கே விஜயன் இயக்க நடிகர் சரத்குமாரின் நிறுவனம் தயாரித்திருந்தது மேலும் இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் கதை அம்சத்துடன் ஒளிபரப்பாகி வந்தது. இவ்வாறு இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில் திடீரென்று இந்த சீரியல் விரைவில் முடித்து விட்டார்கள்.

emi
emi

மேலும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. இப்படிப்பட்ட நிலையில் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த EMI தவணை முறை என்ற தொடரில் நடித்து வந்தார் இந்த சீரியல் கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி ஒளிபரப்பானது. இந்த சீரியலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த தொடரில் பிக்பாஸ் புகழ் பாவனியும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு விக்ரமன் இரண்டு சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த சீரியல் இதற்குப் பிறகு சின்னத்திரையில் நடிக்காமல் இருந்து வருகிறார் மேலும் தற்பொழுது இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் சின்னத்திரைக்கு அறிமுகமாகி இருக்கும் நிலையில் இவருக்கு இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று தந்துள்ளது.