18 வயது சின்ன பையன் போல் மாறிய விக்ரம்.! இது உடம்பா இல்ல வேற ஏதாவதா பிரமிக்கும் ரசிகர்கள்.!

தமிழ் திரையுலகில் நிறைய தோல்வி திரைப்படங்களை கொடுத்துக்கொண்டு இருந்த நேரத்தில் ஏதாவது ஒரு திரைப்படம் நமக்கு கை கொடுக்காதா என்று நினைத்து வந்த விக்ரமிற்கு சேது என்ற திரைப்படம் வெற்றிகரமாக அமைந்தது இந்த திரைப்படத்திற்கு பின்பு தான் விக்ரம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை பதித்தார்.

அந்த வகையில் பார்த்தால் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரது நடிப்பில் தற்பொழுதும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது. பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் கரிகால சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் பாகத்தில் மிகவும் நன்றாக நடித்த விக்ரம் இரண்டாம் பாகத்திலும் தனது நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி உள்ளாராம்.

இவருடன் இணைந்து இந்த திரைப்படத்தில் பல சினிமா பட்டாளங்கள் நடித்துள்ளார்கள் என்று தான் கூற வேண்டும்.இந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக பல ஊர்களுக்கு இந்த திரைப்படத்தின் படக்குழு சென்று கொண்டே இருக்கிறார்கள் இந்நிலையில் ஜெயம் ரவி,விக்ரம்,கார்த்தி,த்ரிஷா,ஐஸ்வர்யா லட்சுமி போன்ற சினிமா பிரபலங்கள் புரமோஷனுக்காக செல்லும்பொழுது எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் விக்ரம்.

மேலும் இதில் விக்ரம் புகைப்படத்தை பார்த்த ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஷாக் கொடுத்துவிட்டார் விக்ரம். ஆம் பொதுவாகவே விக்ரம் ஒரு திரைப்படத்தில் இயக்குனர் எப்படி இருக்க சொல்கிறாரோ அது போல்தான் இருப்பார் அதிலும் குறிப்பாக இவர் ஐ திரைப்படத்தில் பல கிலோ வரை தனது உடல் எடையை குறைத்து கொண்டு அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அதேபோல் தற்பொழுது தங்கலான் திரைப்படத்திற்கு தனது உடல் எடையை முழுமையாக குறைத்துள்ளார் என்பது மட்டும் இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது. மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் இந்தப் படத்தில் நீங்கள் எப்படி நடிக்கிறீங்க எதற்காக இவ்வளவு உடல் எடை குறைத்து பார்ப்பதற்கு மிகவும் ஒல்லியாக இருக்கிறீங்க எனவும் பல வகையான கேள்விகளை கமெண்டில் எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.

Leave a Comment

Exit mobile version