தமிழ் சினிமாவில் விக்ரம் முன்னணி நடிகராகவும் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடலை மாற்றியமைத்து நடிப்பதில் வல்லவர் அந்த வகையில் விக்ரம் எந்த திரைப்படத்திற்கு எந்த மாதிரி கதாபாத்திரம் வேண்டும் என்றாலும் தன்னை அதேபோல் மாற்றிக்கொள்வார் அந்த அளவு கடின உழைப்பை தன்னுடைய படத்தில் காட்டுவார்.
அதேபோல் விஜய் சேதுபதியும் நல்ல கதையுள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வெற்றி கண்டு வருகிறார் அதுமட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரமாக இருந்தாலும் தன்னுடைய முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தி தான் பெஸ்ட் என்பதை நிரூபித்து வருகிறார். இந்த நிலையில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி ஒன்றாக திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.
இயக்குனர் எம் மணிகண்டன் விமர்சன ரீதியாக ரசிகர்களுக்கு பல படங்களை கொடுத்தவர் அடுத்ததாக விஜய் சேதுபதி மற்றும் விக்ரமை வைத்து புதிய திரைப்படத்தை இயக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதேபோல் எம் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகிய காக்காமுட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது.

இந்நிலையில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் ஒரே திரைப்படத்தில் இயக்குவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த திரைப்படம் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு கிளம்பி விட்டது.
அதுமட்டுமில்லாமல் கமலஹாசனின் புதிய திரைப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் விக்ரம் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த திட்டமும் pre-production நிலையில் இருப்பதால் அனைத்து நடிகர்களின் கால்ஷீட் கிடைத்தவுடன் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட இந்த வருட இறுதியில் இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் எனவும் தகவல் கிடைத்துள்ளது.