கலியுகம் செல்லப்போகும் விக்ரம் வேதா பட நடிகை.! இந்த முயற்சியாவது செல்ஃப் எடுக்குமா..?

தமிழ் மொழியை விட கன்னட மொழியில் ரசிகர்கள் மனதில் கொடிகட்டிப் பறந்தவர் தான் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் முதன்முதலாக காற்று வெளியிடை என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் மாதவன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வெற்றி பெற்ற திரைப்படமான விக்ரம்வேதா என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இவ்வாறு இந்தத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் மிக பிரபலமான நடிகையாக மாறிய நமது நடிகை அதன்பிறகு தல அஜித்தின் திரைப்பட வாய்ப்பை பெற ஆரம்பித்தார். அந்த வகையில் எந்த ஒரு நடிகையும் துணிந்து நடிக்க அஞ்சிய திரைப்படமான நேர்கொண்டபர்வை என்ற திரைப்படத்திலும் திறமையாக நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தின் மூலமாக அவர் நடிப்பு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. என்னதான் இவ்வாறு பிரபலமாக இருந்தாலும் அதற்கு ஏற்றார் போல் தமிழில் சரியான படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் கூட இவர் நடித்த மாறா திரைப்படமானது  அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்திவிட்டது. இதை தொடர்ந்து அம்மணி தற்போது கலியுகம் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறாராம்.

இவ்வாறு வெளிவந்த செய்தியை பார்த்த ரசிகர்கள் ஏற்கனவே உங்கள் மாறா திரைப்படத்தை பார்த்து நாங்கள் பெரும் வெறுப்பில் இருக்கிறோம் தற்போது இந்த திரைப் படத்தின் டைட்டிலே கலியுகம் என வைத்துள்ளீர்கள் இது எப்படி இருக்கப் போகிறதோ என கிண்டல் அடித்து வருகிறார்கள்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படமும் வெற்றியடையவில்லை என்றால் நீங்கள் மட்டுமல்ல நாங்களும் கலியுகம் தான் செல்ல வேண்டும் என ரசிகர்கள் கோக்குமாக்கா கிண்டலடித்து வருகிறார்கள்.

Leave a Comment