விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் இந்த டாப் பாலிவுட் நடிகர்களா இதோ அதிகாரப்பூர்வ தகவல்.!

0

2017 ஆம் ஆண்டு புஷ்கர் மற்றும் காயத்ரி இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் விக்ரம் வேதா இந்த திரைப்படத்தில் மாதவன் மற்றும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதுமட்டுமல்லாமல் ஷரதா ஸ்ரீநாத், வரலட்சுமி,கதிர் மற்றும் ஜான் விஜய் ஆகியவர்கள் நடித்திருந்தார்கள்.

படத்தை வை நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி தாதாவாக நடித்திருப்பார் மாதவன் போலீசாக நடித்து இருப்பார், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வெற்றி அடைந்தது இது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான்.

படத்தை இயக்கிய புஷ்கர் மற்றும் காயத்ரி தற்போது இதே கதையை பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள், இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ரோலில் நடிகர் அமீர் கான் மற்றும் மாதவன் ரோலில் சைப் அலிகான் ஆகிய வரும் நடிக்க இருக்கிறார்கள், அது மட்டுமில்லாமல் மார்ச் மாதம் 2020இல் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளன.