90 காலகட்டங்களில் அஜித்தை வைத்து படம் பண்ண ஆசைபாடாமல் இருந்த இயக்குனர் விக்ரமன்.? பல ஆண்டுகள் கழித்து வெளிவரும் உண்மை தகவல்.! அதிர்ச்சியான தல ரசிகர்கள்.

ajith-and-vikraman
ajith-and-vikraman

திரை உலகில் உச்சத்தில் இருக்கும் முன்னணி நடிகர்கள் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் சிறப்பான இயக்குனர்களின் படங்களில் நடிக்க பெரிதும் ஆசைப்படுவது வழக்கம். அந்த வகையில் 90 காலகட்டங்களில் பல முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை கொடுத்த இயக்குனர் விக்ரமன்.

அப்போதைய கால கட்டத்தில் இவரது படங்களில் நடிக்க டாப் ஹீரோக்கள் கூட வரிசைகட்டி நின்றனர் என்றே கூற வேண்டும் அந்த அளவிற்கு சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தான் காரணம் என கூறப்படுகிறது.

விக்ரமன் நடிகர் சரத்குமாரை வைத்து சூரிய வம்சம், விஜயை வைத்து பூவே உனக்காக, சூர்யாவுக்காக உன்னை நினைத்து, விஜயகாந்தை வைத்து வானத்தைப்போல  போன்ற குடும்ப கதை  வைத்து நல்ல படங்களை கொடுத்து அவர்களின் சினிமா வளர்ச்சிக்கு உதவினார்.

இப்படிப் பல ஜாம்பவான்களை அடுத்த லெவெலுக்கு செல்ல பெரிதும் உதவினார். ஆனால் 90 காலகட்டங்களில் காதல் மன்னனாக வலம் வந்த அஜித்தை வைத்து மட்டும் இவர் படம் எடுக்கவே இல்லை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது அதற்கான காரணமும் இன்றுவரை தெரியாமல் இருந்து வந்த ரசிகர்களுக்கு தற்போது அதற்கான காரணம் கிடைத்துள்ளது.

விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னை இடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் மட்டும் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து இருப்பார் அதன்பிறகு விக்ரமன் அஜித்தை கூப்பிடவே இல்லையாம்.

அப்போதைய காலகட்டத்தில் அஜித் காதல் மன்னனாக இருந்து பின் அதிரடி ஹீரோவாக மாறிய காலம் அது அப்போது குடும்ப கதையை கொடுத்து மீண்டும் அவருடைய மார்க்கெட்டை கீழே இறக்க வேண்டாம்  என நினைத்து அஜித்தை வைத்து படம் எடுக்க வில்லையாம் இயக்குனர்.