கெத்தான புல்லட்டை படப்பிடிப்பு தளத்தில் ஓட்டி சென்ற நடிகர் விக்ரம்.! அதுவும் எந்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் தெரியுமா இதோ பாருங்க.

0

வெள்ளித்திரையில் நிறைய ரசிகர் வட்டத்தை சேர்த்து வைத்திருக்கும் நடிகர்களில் மிகவும் முக்கியமான நடிகராக திகழ்பவர் விக்ரம் இவர் ஒரு காலத்தில் தமிழ் திரை உலகில் ராசியில்லாத நடிகர் என பெயர் எடுத்து வந்தார் அதற்கு முக்கிய காரணம் இவர் அப்பொழுது நடித்த அனைத்து திரைப்படங்களும்  தோல்வி அடைந்து கொண்டே இருந்தது இருந்தாலும் தனது விடா முயற்சியினால் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து வந்தார்.

இருப்பினும் அவருக்கு பெரிய வெற்றியை எந்த திரைப்படமும் கொடுக்கவில்லை ஆனால் இவர் நடித்த சேது திரைப்படம் மக்கள் மட்டுமல்லாமல் பல கோடி வசூல் செய்து விட்டது என்றுதான் கூறவேண்டும் சேது திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் இவருக்கு நன்றாகவே கை கொடுத்ததாம் சேது திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த அனைத்து திரைப்படங்கள் மட்டும் அல்லாமல் தமிழ் சினிமாவில் இவருக்கு என்று ஒரு இடத்தையும் நிரந்தரமாக பிடித்து விட்டார்.

மேலும் இவரின் நடிப்பில் தற்போது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதிலும் குறிப்பாக கோப்ரா, சியான் 60,பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களை இவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்

இந்நிலையில் இவரது அன்சீன் புகைப்படம் ஒன்று சமூக வலைதள பக்கங்களில் வெளியாகியுள்ளது இவர் பிரபல நடிகர் ஸ்ரீமன் உடன் புல்லட்டில் சென்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது அது மட்டுமல்லாமல் கடந்த 2018ல் வெளியான ஸ்கெட்ச் திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப் பட்டது போல் தெரிகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் விக்ரம் மாஸாக இருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்.

vikram32
vikram32

ஒரு சில ரசிகர்கள் விக்ரமிற்கு இந்த புல்லட் மிகவும் கச்சிதமாக இருக்கிறது இவர் நடிக்கும் திரைப்படங்கள் கூடிய சீக்கிரம் வெளியே வந்தால் நன்றாக இருக்கும் அதுதான் எங்களது ஆசை என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.