விக்ரம் படத்திற்கு குறையாத மவுஸ் – 50 வது நாளில் இப்படி ஒரு சாதனையா.. மிரண்டுப்போன தமிழ் சினிமா.!

கடந்த மாதம் ஜூன் மூன்றாம் தேதி கமலஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் பான் இந்திய அளவில் வெளியாகி நல்ல விமர்சனங்கள் மற்றும் வசூலை நடத்தியது. இந்த படத்தின் கதையை இளம் இயக்குனர்களில் ஒருவரான லோகேஷ் கனகராஜ் கமலிடம் கூறியுள்ளார் கமலுக்கும் இந்த கதை ரொம்ப பிடிக்கப் போகவே துணிந்து நடித்துள்ளார்.

மேலும் நடித்தது மட்டுமல்லாமல் இந்த படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், சூர்யா, ஏஜென்ட் டினா, காயத்ரி போன்ற பல நடிகர் நடிகைகளும் நடித்திருந்தனர்.

அனைவரும் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்ததால் படம் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படம் தமிழகத்தில் இதுவரை 420 கோடிக்கு மேல் வசுலை அள்ளி உள்ளது. போட்ட பட்ஜெட்டை தாண்டி பல மடங்கு வசூலை பார்த்ததால் படக்குழு மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது. இதனால் கமலஹாசன் படத்தில் பணியாற்றிய பலருக்கும் பரிசு பொருட்களை வழங்கினார்.

மேலும் கமலஹாசன் இந்த படத்தை தொடர்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களிலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. விக்ரம் படம் திரையரங்கில் வெற்றி நடை போட்டதை தொடர்ந்து ஜூலை எட்டாம் தேதி hotstar ஓடிடி தளத்திலும் விக்ரம் திரைப்படம் வெளியாகியது.  இந்த நிலையில் விக்ரம் படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் முடிவடைந்துள்ளது.

அதனை கொண்டாடும் வகையில் சில போஸ்டர்களும் வெளி வந்துள்ளது. மேலும் சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கில் விக்ரம் படம் ஸ்பெஷல் காட்சியாக ஒளிபரப்பப்பட்டது. அந்த ஷோ அனைத்தும் ஹவுஸ்புல் ஆகிவிட்டதாம். படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்துள்ள நிலையிலும் படத்தைக் காண நல்ல கூட்டம் என திரையரங்க உரிமையாளர் பதிவிட்டுள்ளார்,

Leave a Comment