படக்குழுவுடன் வெற்றியை கொண்டாடும் விக்ரம்.! அதுவும் எந்த அளவிற்கு பார்த்தீர்களா..

தமிழ்நாட்டில் பல திரையரங்குகளில் தற்பொழுது வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இயக்குனர் மணிரத்னம் அவர்களின் அசாத்திய இயக்கத்தில் வெளியான இந்த இரண்டு பாகங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நிறைய திருப்பங்கள் இருந்தாலும் இரண்டாம் பாகம் மக்களிடையே திருப்தியாக வெற்றி பெற்று வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் இந்த இரண்டாம் பாகத்தில் பல பிரபலங்களும் தங்களது நடிப்பை அதிகமாக வெளிப்படுத்தி உள்ளார்கள் என்று தான் கூற வேண்டும். குறிப்பாக இதில் நடித்த அனைத்து பிரபலங்களும் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் உச்ச நட்சத்திரமாக புகழ் பெற்று விளங்கி வருகிறார்கள்.

இந்த இரண்டாம் பாகத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இதில் நடித்த பல பிரபலங்களும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வந்த வீடியோவை நாம் பார்த்திருப்போம் அதேபோல் தற்பொழுது விக்ரம் படக் குழுவை சந்தித்த பொழுது எடுத்த வீடியோவை தனது twitter பக்கத்தில் பதிவு செய்து உள்ளார்.

அதில் விக்ரம் மகிழ்ச்சிக்கு வெற்றி திறவுகோலல்ல..மகிழ்ச்சியே வெற்றிக்குத் திறவுகோல். என்னை மகிழ்வித்த உங்களுடைய அளவில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் பல கோடி நன்றிகள் என்று வீரவேல்,வெற்றிவேல் என பதிவு செய்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

மேலும் இந்த வீடியோவை பார்த்த இவரது ரசிகர்கள் பலரும் தற்பொழுது இந்த வீடியோவை இணையத்தில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் விக்ரம் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தையும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள்.

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்தை விக்ரமின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருவது இந்த திரைப்படத்தில் விக்ரம் ஒரு புதிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் இதனை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிக ஆவலாக இருக்கிறார்களாம்.

Leave a Comment