விக்ரம் பிரபு : என்னுடைய வாழ்க்கையில் மிக மிக முக்கியமான படம் இதுதான்.! பொன்னியின் செல்வன் கிடையாது.?

சினிமா உலகில் முன்னணி நடிகர்களாக இருக்கும் நடிகர்களின் மகள்,மகன்கள் சினிமா உலகில் ஈசியாக கால்தடம் பதித்து நடிக்கின்றனர் அந்த வகையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை தொடர்ந்து அவரது மகன் பிரபு தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார்.

அவரை தொடர்ந்து அவரது மகன் விக்ரம் பிரபுவும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து அசத்துகிறார். விக்ரம் பிரபு முதலில் கும்கி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் முதல் படமே இவருக்கு அதிரிபுதிரி ஹிட் அடித்தது அதன்பின்  அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.

அந்த வகையில் சிகரம் தொடு, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற படங்கள் அவருக்கு பேரையும், புகழையும் பெற்றுக் கொடுத்தது. அதைத்தொடர்ந்து  இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான திரைப்படங்கள் தோல்விப் படங்களாக அமையவே வேறு வழியில்லாமல் சிறந்த இயக்குனர்களிடம் தஞ்சம் அடைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துள்ளார்.

அந்த வகையில் விக்ரம் பிரபு மணிரத்னத்துடன் பொன்னியின் செல்வன், தமிழ் இயக்கத்தில் டாணாக்காரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த இரண்டு இறை படங்களுமே  அடுத்தடுத்து வருகின்றன. முதலில் டாணாக்காரன் படம் OTT தளத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படம் 1990 காலகட்டங்களில் போலீசார்களுக்கு எந்த மாதிரியான பயிற்சி கொடுக்கப்பட்டது.

காவல்துறை அதிகாரிகள் எப்படி இருந்தனர் கூடியதும் இந்த படம் பேசும் என தெரியவருகிறது. இது குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் விலாவாரியாக பேசியுள்ளார் நடிகர் விக்ரம் பிரபு. என்னுடைய வாழ்க்கையில் மிக மிக முக்கியமான படம் டாணாக்கரான் ரசிகர்களுக்கும் பிடிக்கும். இந்த மாதிரி ஒரு படத்தை எடுக்க முடியாது எனவும் அவர் சொல்லி உள்ளார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment