பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் புதிதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் பிரபு.? இவருக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் கிடைத்தது மிகவும் அதிஷ்டம் தான்.

0

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது அந்த வகையில் பார்த்தால் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்களும் நல்ல வரவேற்பு தந்தார்கள் என்று தான் கூற வேண்டும் ஒரு சில காலகட்டங்களில் இவர் தொடர்ச்சியாக தோல்வி திரைப்படங்களை கொடுத்து வந்தார் அதனால் பலரும் இவரது பக்கம் திரும்பவில்லை.

இருப்பினும் தற்போது பொன்னியின் செல்வன் என்ற கதையை மிகப்பெரிய பட்ஜெட்டில் இயக்கி முடித்துள்ளார் எனவும் தகவல் கிடைத்துள்ளது இந்த திரைப்படத்தில் பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள் தங்களது கதாபாத்திரத்தை முடித்த பல நடிகர்களும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் நான் எனக்கு கொடுக்கப்பட்டிருந்த கதாபாத்திரத்தை சிறப்பாக முடித்து விட்டேன் என்று பதிவு செய்ததை நாம் பார்த்திருக்கலாம்.

இதனை தொடர்ந்து தற்போது இந்த திரைப்படத்தில் புதிதாக ஒரு பிரபலம் நடித்துள்ளதாக தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.ஆம் அந்த தகவலில் நடிகர் விக்ரம் பிரபு பார்த்திபன் என்ற பல்லவன் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம் ஜெயம் ரவி,கார்த்தி,விக்ரம் தொடர்ந்து இவரும் இதில் நடித்துள்ளது.

ரசிகர்களுக்கு மிகவும் பெருமையாக தான் இருக்கும் ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் பலரும் இது உண்மைதான் என கூறி வருகிறார்கள் விக்ரம்பிரபு இந்த திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் வெளியானால் இவருக்கு தொடர்ச்சியாக பல திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைக்குமாம்.

மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை நாங்கள் மிக ஆவலாக எதிர்பார்க்கிறோம் இதில் விக்ரமின் நடிப்பு மற்றும் பல நடிகர்களின் நடிப்பை நாங்கள் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறோம் என கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.