அதிரடி ஆக்ஷனில் மிரட்டும் விக்ரம் பிரபுவின் புலிகுத்தி பாண்டி திரைப்படத்தின் டீசர் இதோ.!

0

தமிழ் சினிமாவில் சமீபகாலமாக கிராமத்து கதைகளை கொண்ட திரைப்படங்களை மக்கள் அதிகம் விரும்பி பார்க்கிறார்கள், அப்படி கிராமத்து கதைகளை அதிரடி ஆக்ஷனில் கூறுவதில் வல்லவர் முத்தையா.

இவர் இதற்கு முன் இயக்கிய கொம்பன், குட்டிபுளி, மருது ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றி பெற்றது, ஆனால் முத்தையா இயக்கிய திரைப்படங்கள் ஒரே மாதிரியாக இருக்கிறது என பலரும் குற்றச்சாட்டை வைத்தார்கள்.

அது மட்டுமல்லாமல் அவர் இயக்கத்தில் வெளியாகிய கொடிவீரன் தேவராட்டம் ஆகிய திரைப்படங்கள் தோல்வியை சந்தித்தது, அதுக்கு காரணம் முத்தையா ஜாதி கலந்த திரைப்படங்களை இயக்குவதாக ஒரு சிலர் கூறுகிறார்கள். இதெல்லாம் ஒரு புறம் இருக்க தற்போது முத்தையா அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை அசுர வேகத்தில் முடித்துள்ளார்.

தற்பொழுது முத்தையா சன் பிக்சர் நிறுவனம் தயாரிப்பில் விக்ரம் பிரபு நடிப்பில் ‘புலிகுத்தி பாண்டி’ என்ற திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற பொங்கலை முன்னிட்டு நேரடியாக டிவியில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலானது இதனைத் தொடர்ந்து தற்போது டீசரை படக் குழு வெளியிட்டுள்ளது.

மேலும் சன் பிச்சர் நிறுவனம் சமீபகாலமாக புதிய திரைப்படங்களை திரையரங்கில் ஒளிபரப்பாமல் தனது தொலைக்காட்சி மூலம் நேரடியாக ஒளிபரப்பி வருகிறார்கள் இதற்கு முன் தீபாவளி தினத்தை முன்னிட்டு நாங்க ரொம்ப பிசி என்ற திரைப்படத்தை நேரடியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.