தம்பி உன்னுடைய நடிப்பு வேற லெவல்.. விக்ரம் பிரபுவை புகழ்ந்து தள்ளிய பிரபல நடிகர்.! கலக்கும் ட்வீட்.!

சினிமாவுலகில் வாரிசு நடிகர்கள் பலர் கால்தடம் பதித்து தனது திறமையை வெளிக்காட்டி தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளி வருகின்றனர். அந்த வகையில் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து அசத்தி வருகிறார் முதலில் இவர் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானார்.

முதல் படமே அவருக்கு வெற்றிப்படமாக அமைந்ததால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் சிகரம் தொடு, இவன் வேற மாதிரி, அரிமா நம்பி,  வாகா,  வீரசிவாஜி, சத்திரியன் போன்ற பல படங்களில் நடித்து அசத்தினார்.

இப்பொழுது கூட இவர் நடிப்பில் வெளியான டாணாக்காரன் திரைப்படம் நல்லதொரு வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை என்றாலும் OTT தளத்தில்  வெளியாகி மக்களை வெகுவாக கவர்ந்து இழுத்து உள்ளதாக கூறப்படுகிறது.

படம் நிச்சயம் விக்ரம் பிரபுவின் சினிமா கேரியரில் மிகப்பெரிய ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் சொல்லி வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் விக்ரம் பிரபுவின் நடிப்பை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு உள்ளாராம். இதுகுறித்து விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து.

rajini
rajini

என் நடிப்பை பார்த்துவிட்டு சூப்பர்ஸ்டாரிடம் இருந்து போன் கால் வந்தது மிகப்பெரிய ஒரு பீலிங் நான் கனவில் கூட நினைக்காதை சாதித்து இருக்கிறேன் உங்களது PASSION – னை  பின்தொடர்ந்து சென்றால் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சிறப்பான விஷயங்கள் நடக்கும் என விக்ரம் பிரபு கூறியுள்ளார்.

Leave a Comment