18 வருடங்கள் கழித்து வெளியான பிதாமகன் பட ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்.! இதுவரை யாரும் பார்த்திராதது.

தமிழ் சினிமாவிற்கு இயக்குனர் பாலா வித்தியாசமான திரைப்படங்களை கொடுப்பதால் அவர் இயக்கும் படங்கள் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெறுகின்றன. இதன் முலம் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்து உள்ளார்.

பாலா இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு  டாப் நடிகர் விக்ரம் சூர்யாவை வைத்து இயக்கிய திரைப்படம் தான் பிதாமகன் இந்த படத்தில் இவர்களுடன் இணைந்து லைலா, சங்கீதா, மகாதேவன், கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு, மொட்ட ராஜேந்திரன் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

பிதாமகன் படத்தில் பலர் அசாதாராண நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் சூர்யா, விக்ரமின் நடிப்பு இந்தப் படத்தில் வேற லெவல் இருந்ததோடு சூர்யாவுக்கும், விக்ரமுக்கும் கேரியரில் மிகப்பெரிய பெஸ்ட் படமாக அமைந்தது.

இந்த படம் பலருக்கும் திருப்புமுனை படம் அதிலும் விக்ரமுக்கு சொல்லவே வேண்டும் இந்த படத்தின் மூலம் அவரது நடிப்பு வேற லெவல் இருந்ததோடு இந்த படத்திற்காக தேசிய விருதையும் தன்வசப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிதாமகன் படம் வெளியாகி  இத்துடன் 18 வருடங்கள் ஆன நிலையில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு புதிய புகைப்படம் ஒன்று இணையதளத்தில் தற்போது வேகம் எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தில் இயக்குனர் பாலா, சூர்யா, விக்ரம், இசைஞானி இளையராஜா போன்றோர் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையதளத்தில் பகிரப்பட்டு தற்பொழுது பார்ப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

pithamakan

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் அதை தொடர்ந்து வெற்றிமாறன் உடனும் இணைந்து நடிக்க உள்ளார் விக்ரமும் அதேபோல அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் சீயான் 60  திரைப்படத்திலும் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version