தமிழகத்தில் மட்டும் பல கோடி லாபம் பார்த்த “விக்ரம் திரைப்படம்” – வெளியே கசிந்த தகவல்.!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் கைதி மாஸ்டர் போன்ற ஹிட் படங்களைத் தொடர்ந்து தனது ஆசை நாயகன் கமலுக்காக விக்ரம் என்னும் ஆக்சன் கதையை கூற அவருக்கு அந்த கதை பிடித்துப்போக விக்ரம் படம் எடுக்கப்பட்டது. இந்த படத்தை அதிக பொருட்செலவில் கமலின் சொந்த நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.

அதனால் விக்ரம் படத்திற்கு தேவையான பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மிகச் சிறப்பாக இந்த படத்தை எடுத்துள்ளனர். படமும் கடந்த ஜூன் 3ஆம் தேதி வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று ஓடி வருகிறது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து நடித்த விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் போன்ற அனைவரின் நடிப்பும் பாராட்டும் வகையில் இருந்தது.

அந்த அளவிற்கு படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். விக்ரம் படம் போட்ட பணத்தைத் தாண்டி பல கோடி லாபம் பார்த்து வருகிறது. மேலும் விக்ரம் படம் வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை மற்ற டாப் ஹீரோக்களின் படங்கள் எதுவும் வெளிவராத..

பட்சத்தில் விக்ரம்படம் நல்ல கல்லா கட்டி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் விக்ரம் படம் சுமார் 320 கோடிக்கு மேல் வசூலை அள்ளி வருகின்ற நிலையில் தமிழில் இதுவரை வெளிவந்த டாப் நடிகர்களின் படங்களின் வசூலை முறியடித்து முதலிடத்தில் விக்ரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தமிழகத்தில் மட்டுமே 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி உள்ள நிலையில் தமிழகத்தில் சுமார் ரூ 40+ கோடிக்கு மேல் லாபத்தை ஈட்டியும் விக்ரம் படம் சாதனை படைத்துள்ளது.

Leave a Comment