காடுன்னு ஒன்னு இருந்தா சிங்கம், புலி, சிறுத்தை வேட்டைக்குப் போகும்..! மிரட்டலாக வெளியானது கமலின் விக்ரம் திரைப்படத்தின் டிரைலர்.!

0

உலகநாயகன் கமலஹாசன் நீண்ட இடைவெளிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படத்தில் பகத் பாசில், விஜய் சேதுபதி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைத்துள்ளார்.

இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது. ஏற்கனவே திரைப்படத்தின் போஸ்டர் டீசர் என வெளியாகி ரசிகர்களிடம் வைரலானது அதுமட்டுமில்லாமல் படக்குழு அடிக்கடி அப்டேட்களை வெளியீட்டு ரசிகர்களை பரபரப்பாக வைத்து வருகிறது.

இந்த நிலையில் படத்திலிருந்து டிரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது இந்த டிரைலரில் ஆரம்பத்தில் கமலஹாசன் காடு என்று ஒன்று இருந்தால் சிங்கம், புலி, சிறுத்தை வேட்டைக்குப் போகும் என்ற வசனத்துடன் ஆரம்பித்துள்ளது.

அதேபோல் விஜய் சேதுபதி விக்ரம் திரைப்படத்தின் டிரைலரில் கொடூர வில்லனாக நடித்துள்ளார். கமலஹாசன் துப்பாக்கியை  வைத்து  வில்லன்களுடன் புகுந்து விளையாடுகிறார் இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.