கல்லாப் பெட்டியை நிரப்பும் “விக்ரம் திரைப்படம்” – உலகம் முழுவதும் இதுவரை அள்ளிய மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா.?

நடிப்பிற்கு பெயர்போன உலகநாயகன் கமலஹாசன் தொடர்ந்து சிறப்பான படங்களை கொடுத்து வந்தாலும் கடந்த நான்கு வருடங்களாக அரசியல் வியாபாரம் சின்னத்திரை என மற்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தியதால் வெள்ளித்திரையில் நடிக்காமல் போனார்.

இந்த நிலையில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உலகநாயகனிடமும் விக்ரம் படத்தின் கதை கூறவே கமலுக்கு ரொம்ப பிடித்துப் போக உடனடியாக அந்த படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் செய்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ஒருவழியாக ஜூன் மூன்றாம் தேதி திரையரங்கில் வெளியானது.

படத்தின் கதைகளம் சற்று வித்தியாசமாக இருந்ததால் இந்த படம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சூப்பராக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தில் கதைக்கு ஏற்றவாறு நடிகர்களும் சூப்பராக நடித்துள்ளனர் அந்த வகையில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா, நரேன், ஏஜென்ட் டினா மற்றும் பலர் இந்த படத்தில் சூப்பராக நடித்த ஆகுதி இருந்தது  இந்த படத்திற்கு பக்க பலமாக அமைந்துள்ளது.

விக்ரம் திரைப்படம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெறுவதால் வசூலில் அடித்து நொறுக்கி வருகிறது தற்போது வரை உலக அளவில் விக்ரம் திரைப்படம் 365 கோடி வசூலை அள்ளி உள்ளதாக கூறப்படுகிறது. அதுவும் 3 வாரங்களில் மட்டுமே 365 கோடி என்பதே மிகப்பெரிய ஒரு சவாலாக சினிமா உலகில் பார்க்கப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் இவ்வளவு பெரிய வசூலை அள்ள முக்கிய காரணம் தமிழகம் கேரளம் ஆந்திரா மற்றும் வட மாநிலம் என அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் வேட்டையை நடத்தியது. இந்த படத்திற்கான வரவேற்பு இன்றும் குறையாமல் அதிகரித்த வண்ணமே இருப்பதால் நிச்சயம் விக்ரம் திரைப்படம் 500 கோடி வசூலிக்கும் என கூறப்படுகிறது.

Leave a Comment