மாஸ் காட்டும் விக்ரம் படம் – முன்பதிவில் மட்டுமே இத்தனை கோடியா.?

உலகநாயகன் கமலஹாசன் சிறு இடைவெளிக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் தான் விக்ரம் இந்தப் படத்தை ஆக்சன் திரைப்படமாக எடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை மிக பிரமாண்ட பொருட்செலவில் கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.

விக்ரம் திரைப்படத்தில் கமலுடன்  சேர்ந்தது விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிப்பில் அசத்தி உள்ளது இந்த படத்தில் கமல் மிரட்டி உள்ளார் என படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வண்ணமே இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு வேறு மாதிரி இருக்கிறது படம் சிறப்பாக பந்து உள்ள காரணத்தினால் படத்தை மிகப்பெரிய அளவில் ரீச் செய்துள்ளது.

உலக அளவில் மட்டுமே சுமார் 5000 திரையரங்குகளில் படம் ரிலீஸாக இருக்கிறது. கமலும், படக்குழுவும் தொடர்ந்து ஆடியோ பங்ஷன், விஜய் டிவி நிகழ்ச்சி மற்றும் மலையாளம் என அனைத்து பக்கத்திலும் சென்று விக்ரம் படத்தை பரப்பி வருகின்றனர் குறிப்பாக மலையாளம் மற்றும் தமிழகத்தில் படம் வேற மாதிரியான வசூலை அள்ளும் என கூறப்படுகிறது.

படம் வெளிவர இன்னும் ஒரு நாள் மட்டுமே தான் இருக்கிறது. இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்திய உலகநாயகன் கமலஹாசன் நாளை காலை 4 மணிக்கு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்க்கும் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் முன்பதிவு அனைத்து இடங்களிலும்  சூப்பராகப் போய்க்கொண்டு இருக்கிறது தமிழகத்தில் ரெட்ஜெயன்ட் மூவி நிறுவனம் தான் வெளியிடுகிறது அனைத்து முன்பதிவு ஜோராக நடந்து வருகிறது முன் பதிவில் மட்டுமே தற்போது வரை விக்ரம் திரைப்படம் 8 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன

Leave a Comment