விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா.? இவர் நடிப்பு பேய் மாதிரி இருக்குமே…

vikram
vikram

தமிழ் சினிமாவில் சமீப காலமாக இளம் இயக்குனர்களின் வரத்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இளம் இயக்குனர்கள் வித்தியாசமான கதைகளத்தை உருவாக்கி அதில் வெற்றி கண்டு வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் முன்னணி நடிகர்கள் பலரும் சமீப காலமாக இளம் இயக்குனர்களின் படத்தில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இதுவரை இயக்கிய திரைப்படங்கள் வெற்றி வகை சூடி வருகிறது. அந்த வகையில் மாநகரம் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக உருவெடுத்த லோகேஷ் கனகராஜ் கைதி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டினார். பின்பு தளபதி விஜய் அவர்களை வைத்து மாஸ்டர் என்ற திரைப்படத்தில் இணைந்தார் இந்த திரைப்படம் 50% லோகேஷ் கனகராஜ் சாயலில் மீதி 50% விஜயின் சாயலில் இருந்தது.

லோகேஷ் கனகராஜ் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமலஹாசனை வைத்து விக்ரம் திரைப்படத்தை இயக்கினார். விக்ரம் திரைப்படம் வெளியாகி தமிழ் சினிமாவை தலை நிமிரச் செய்தது விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது அது மட்டும் இல்லாமல் நீண்ட காலம் சரியான ஹிட் கொடுக்க முடியாமல் இருந்த கமலுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று கொடுத்தது.

அதிலும் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது விஜய் சேதுபதியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது. விக்ரம் திரைப்படத்தில் கமலுக்கு நிகரான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மிரட்டி இருந்தார். அதுமட்டுமில்லாமல் கிளைமாக்ஸ் காட்சியில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடித்து மிரட்டி இருந்தார்.

பல ரசிகர்கள் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கவே சென்று இருந்தார்கள் அந்த அளவு கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா மிரட்டி இருந்தார். இந்த நிலையில் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடித்த சந்தனம் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற விவரம் தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் பிரபல ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்தார் ராகவா லாரன்ஸ்  இவர் அந்த பேட்டியில் கூறியதாவது லோகேஷ் கனகராஜ் விக்ரம் திரைப்படத்தின் கதையை முதலில் என்னிடம் தான் கூறினார்.

அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி நடித்த சந்தனம் கதாபாத்திரத்தில் முதலில் என்னை தான் நடிக்க வைக்க என்னிடம் கதையை கூறினார் ஆனால் எனக்கு கால் சீட் பிரச்சினை காரணமாக அந்த திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியவில்லை. அந்த சமயத்தில் நான் அந்த திரைப்படத்தை விட்டு விட்டேன் ஆனால் இனிமேல் இதுபோல் கதாபாத்திரம் அமைந்தால் விடமாட்டேன் என  ராகவா லாரன்ஸ் ஓப்பனாக பேசி உள்ளார்.