400 கோடியை நோக்கி நகரும் “விக்ரம் திரைப்படம்” – 18 நாள் முடிவில் அள்ளிய மொத்த தொகை எவ்வளவு தெரியுமா.?

சினிமா உலகில் எந்த மாதிரியான கதைகள் கொடுத்தாலும் எந்த மாதிரியான கதாபாத்திரங்களாக இருந்தாலும் அதில் தனது திறமையை காட்டி வெற்றியை ருசிப்பவர் உலகநாயகன் கமலஹாசன். கடந்த நான்கு வருடங்களாக சினிமா பக்கமே வராமல் இருந்த இவரை இயக்குனர் லோகேஷ் சந்தித்து.

விக்ரம் படத்தின் கதையை கூற அது அவருக்கு ரொம்ப பிடித்துப் போகவே அந்த படத்தை தயாரித்து நடிக்கவும் செய்தார் மிக பிரமாண்ட பொருள் செலவில் இந்த படம் எடுக்கப்பட்டு ஒரு வழியாக ஜூன் 3ஆம் தேதி படம் வெளியானது. இந்த படத்தில் கமலுடன் இணைந்து பகத் பாசில், விஜய்சேதுபதி, சூர்யா, நரேன், ஏஜென்ட் டினா, காயத்ரி என பலரும் நடித்திருந்தனர்.

படம் ஆரம்பத்தில் இருந்தே மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு ரொம்ப பிடித்து போனதால் தொடர்ந்து விக்ரம் படம் திரையரங்கில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதன் காரணமாக நாளுக்கு நாள் வசூல் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. கடந்த ஐந்து வருடங்களாக எந்த ஒரு திரைப்படமும் இவ்வளவு வசூலை அள்ளியது.

கிடையாது அந்த அளவிற்கு பிரமாண்ட வசூலை அள்ளியுள்ளது விக்ரம் திரைப்படம் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி பார்த்தால் 18 நாள் முடிவில் விக்ரம் திரைப்படம் உலக அளவில் மொத்தமாக சுமார் 380 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவில் மட்டும் 265 கோடியும் ஓவர்சீஸ் ஏரியாக்களில் 115 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வருகின்ற நாட்களிலும் நல்லதொரு வசூலை அள்ளி விக்ரம் படம் ஒரு புதிய உச்சத்தை தொடும் என்பது படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் தொடங்கி ரசிகர்கள் வரை கூறி வருகின்றனர்.

Leave a Comment