கணவன் வீட்டில் என்னை கொடுமைப் படுத்தினார்கள் அதனால் தான் விவாகரத்து பெற்றேன் எனக் கூறி அதிர்ச்சியடைய வைத்த விக்ரம் பட நடிகை.!

Vikram movie actress

பொதுவாக சினிமா என்றால் திருமணதிற்கும் ஆண் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருப்பது வழக்கம்தான் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்பொழுது நார்மலாகவும் பெண்கள் ஆண் நண்பர்களிடம் பேசுவது பழகுவது பெரிதாக தப்பே இல்லை ஆனால் சினிமா என்று வரும்போது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் இப்படிப்பட்ட நிலையில் சினிமாவில் வேலை செய்து வரும் பெண்கள் சினிமாவை சேர்ந்த வரை திருமணம் செய்து கொண்டால் பெரியதாக பிரச்சனை இருக்காது.

ஆனால் இதுவே சினிமாவில் சுத்தமாக தொடர்பு இல்லாமல் வெளியில் இருப்பவரை திருமணம் செய்து கொண்டால் அது பிரச்சினைதான் அந்த வகையில் தற்பொழுது விக்ரம் பட நடிகை ஒருவர் சீரியல்களில் நடித்ததால் எனது கணவர் மற்றும் கணவரின் வீட்டில் இருப்பவர்கள் கொடுமை செய்ததாகவும் இதனால் தான் விவாகரத்து பெற்றேன் எனவும் சமீப பேட்டி ஒன்றில் கூறியது மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியை பெற்ற விக்ரம் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு 3 மனைவி. அந்த மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தவர் தான் விஜே மகேஸ்வரி. இவர் 90 காலகட்டத்தில் ஏராளமான தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.மேலும் சில சீரியல்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு திருமணம் செய்து கொண்ட இவர் சினிமாவில் இருந்து தள்ளி இருந்தார் இப்படிப்பட்ட நிலை தற்போது இவருக்கு விவாகரத்து ஆகியுள்ள நிலையில் அவருடைய கணவர் வீட்டில் நடந்த கொடுமைகளை பற்றி கூறியுள்ளார். அதாவது தனது கணவர் வீட்டில் இருந்தவர்கள் சீரியலில் நடிக்க கூடாது என்றும் ஆண் நண்பர்களுடன் பழகக் கூடாது என்றும் அடிமைப்படுத்தி நிபதனைகள் விதித்திருந்தார்கள் மேலும் தொகுப்பாளராக மட்டும் தான் பணியாற்ற வேண்டும் என கூறி இருந்தார்கள்.

maheshwari
maheshwari

சீரியலில் நடித்தால் எங்களின் குடும்பத்தின் மானம் போய்விடும் என கொடுமை செய்ததாகவும் தனது அம்மாவிற்கு செய்த சிறு உதவிகளை கூட செய்ய கூடாது என்று கூறியதால் என்னுடைய அம்மா வீட்டு வேலை பார்ப்பதற்காக முடிவெடுத்தார் கஷ்டப்பட்டு என்னை வளர்த்த என் அம்மாவை எப்படி நான் வீட்டு வேலை பார்க்க விட முடியும் இதனால் இவ்வாறு அனைத்து பிரச்சினைகளிலும் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள விவாகரத்து பெற முடிவெடுத்தேன். அதன் பிறகு தற்பொழுது மிகவும் நிம்மதியாக இருப்பதாகவும் விக்ரம் திரைப்படத்திற்குப் பிறகு தொடர்ந்து சில திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.