காணாமல் போன விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த தமிழ் நாட்டு இளைஞன்.! வெளியான மாஸ் புகைப்படம்.

0
shan

மதுரையை சேர்ந்த இளைஞர் ஒருவர் சந்திராயன் 2 விண்கலம் சுமந்து சென்ற விக்ரம் லேண்டரை கண்டுபிடித்த அசத்தியுள்ளார்.

சந்திராயன் 2 விண்கலம் கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி விண்ணில் ஏவப்பட்டது, விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன்2 விண்கலத்தில் விக்ரம் லேண்டர் பொருத்தப்பட்டிருந்தது, இந்த விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு செய்வதற்காக தரையிறங்கியது ஆனால் விக்ரம் லேண்டர் தொடர்பு திடீரென துண்டிக்கப்பட்டது.

அதனால் விக்ரம் லேண்டரை  கண்டுபிடிக்கும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டு வருகிறது இதற்கு அமெரிக்காவில் உல்ல நாசாவும் உதவி செய்து வருகிறது. இந்த நிலையில் விக்ரம் லேண்டர் என்ன நிலை என்ன என்பது தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சண்முகம் சுப்பிரமணியம் என்ற இன்ஜினியர் விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் இருக்குமிடத்தை கண்டறிந்துள்ளார் அதனை நாசாவுக்கு தெரிவித்துள்ளார், அவர் அளித்த தகவலின்படி நாசா தீவிர சோதனை செய்துள்ளது.

அப்பொழுது அவர் கூறிய இடத்தில் விக்ரம் லேண்டர் இன் உடைந்த பாகங்கள் இருப்பதை உறுதி செய்தது, மேலும் சண்முக சுப்பிரமணியன் கூறிய இடத்தை s எனக் கூறி தனது சமூகவளைதல பக்கத்தில் நாசா வெளியிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் அவருக்கு மின்னஞ்சல் வழியாக பாராட்டும் தெரிவித்துள்ளது இந்த இன்ஜினியர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.