விக்ரமின் கடாரம் கொண்டான் திரைவிமர்சனம்.!

0
kadaram_kondan_review
kadaram_kondan_review

நடிகர் விக்ரம் நீண்டகாலமாக மிகப்பெரிய ஹிட் கொடுக்க காத்திருக்கிறார் அந்த வகையில் இன்று  விக்ரம் நடிப்பில் திரைக்கு வந்துள்ள திரைப்படம் கடாரம் கொண்டான், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வெற்றி பெற்றதா இல்லையா என்று பார்க்கலாம்.

படத்தின் கதை

கடாரம் கொண்டான் திரைப்படத்தில் ஆரம்பித்திலேயே விக்ரம் அடிபட்டு இரண்டு பேர் துரத்துகிறார்கள், அப்பொழுது அங்கிருந்து வந்த பைக் அவர் மீது மோத கீழே மயங்கி விழுகிறார், அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார்கள், அப்படியிருக்க அந்த மருத்துவமனையில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளவர் தான் அபி ஹாசன் இவர் அவருக்கு சிகிச்சை கொடுக்கிறார்.

அபி ஹாசனின் மனைவி கர்ப்பமாக இருக்கின்ற நிலையில் அவரை வீட்டில் தனியாக விட்டுவிட்டு  இவர் நைட் ஷிப்ட்  வேலைக்கு வருகிறார், அந்த சமயத்தில் விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார், அப்படி இருக்க ஒரு நாள் வேலை முடிந்து வீட்டிற்கு வர அபியை அடித்துவிட்டு அவரது மனைவியை  ஒருவர் கடத்தி செல்கிறான், பின்பு விக்ரமை அந்த மருத்துவமனையில் இருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள் கடத்தியவர். அவரும் வேறு வழியில்லாமல் தனது மனைவியை காப்பாற்ற வேண்டும் என விக்ரமை வெளியே கொண்டு வருகிறார் பிறகு நடக்கும் அதிரடி காட்சிகள் மற்றும் திருப்பங்கள் தான் இந்த கடாரம் கொண்டான்.

படத்தை பற்றி

நடிப்பில் விக்ரமை அடித்துக்கொள்ள முடியாது இது அனைவருக்கும் தெரிந்தது தான் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நான் ரெடி என கெத்தாக நடித்து வருபவர், இந்த  திரைப்படத்திலும்  அசால்ட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், படத்தில் விக்ரம்  ஹாலிவுட் ஹீரோ போல் நடித்துள்ளார், அதேபோல் விக்ரம் பேசும் வசனங்களை விரல் விட்டு எண்ணி விடலாம், வசனங்கள் இவருக்கு மிக மிகக் குறைவுதான்.

மேலும் கடாரம் கொண்ட திரைப்படத்தில் விக்ரம் வருவது மிக மிக குறைந்த நேரம் தான் படத்தில், விக்ரமை விட அதிகமாக திரையில் வருவது அபி ஹாசன் தான், அதேபோல் இவருக்கு இதுதான் முதல் படம். முதல் படமாக இருந்தாலும் தனது மனைவியை தேடும் கணவனாக முகத்தில் பதட்டமும் வலியும் நன்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் முதல் படம் என்பதால் இன்னும் எமோஷனல் காட்சிக்கு பயிற்சி மிக மிக அவசியம்.

அதேபோல் படத்தில் அக்ஷரா ஹாசன் சில இடங்களில் வந்து சென்றார் ஆனால் கிளைமாக்ஸில் போலீசிடம் மோதும் காட்சிகள் நம்மை பதட்டத்தின் உச்சத்திற்கே கொண்டு செல்கிறது படத்தில் மிக முக்கியமான highlight காட்சி என்றால் இதுதான். மேலும் படத்தில் பல புதுமுகங்கள் நடித்துள்ளார்கள் அதுவும் மலேசியா களம் என்பதால் இது தமிழ் படம் தானா என தோன்றுகிறது, படத்தில் ட்விஸ்ட்  இருந்தாலும் இதை யார் செய்தது என்ற பதற்றம் பார்ப்பவர்களுக்கு வரவில்லை அதுதான் படத்தின் மைனஸ்.

மேலும் படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட், படத்தின் இடைவேளையிலேயே ஓபன் செய்து விடுகிறார்கள், இதனைத் தொடர்ந்து படத்தின் முடிவில்  ஏதாவது ட்விஸ்ட் இருக்கும் என எதிர்பார்த்தால் படமும் முடிந்து விடுகிறது, மேலும் படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் என்றால் விக்ரம் படம் முழுக்க செம ஸ்டைலாக வருகிறார். ஆனால் படத்தில் பெரிதாக எந்த ஒரு டிவிஸ்டும் இல்லை, மேலும் படத்தின் ஒளிப்பதிவு மற்றும் ஜிப்ரானின் இசை அனைவரையும் கவர்ந்துள்ளது.

கடாரம் கொண்டான் = 2.70/5