விக்ரம் நடித்துள்ள கடாரம் கொண்டான் திரைப்படம் திரையில் ஓடிக் கொண்டிருக்கிறது, இந்த திரைப்படத்தில் கமலின் இளைய மகள் அக்ஷரா ஹாஸனும் நடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் கமல் தான் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
மேலும் நாசரின் மகன் இந்த திரைப்படத்தில் தான் முதன்முதலாக அறிமுகமாகிறார், இவருக்கு இந்த திரைப்படம் முதல் படம் என்றாலும் இவரின் நடிப்பு அனைவரையும் கவர்ந்து விட்டது, இந்த நிலையில் கடாரம் கொண்டான் திரைப்படத்தின் வசூல் விவரம் தெரியவந்துள்ளது.
ரிலீஸான முதல் நாளே கடாரஙம் கொண்டான் திரைப்படம் ஓரளவு வசூல் ஈட்டியது இந்த நிலையில் இரண்டாவது நாள் விடுமுறை என்பதால் கடாரங்கொண்டான் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது, மேலும் இரண்டாவது நாள் முடிவில் கடாரங்கொண்டான் திரைப்படம் 7 கோடி வரை வசுளிதுள்ளதாம் தமிழ்நாட்டில்.