கெத்தாக நடந்து வரும் விக்ரம்.! அதுவும் எப்படி இருக்கிறார் என்று பார்த்தீர்களா.! இணையத்தில் வைரலாகும் வேற லெவல் வீடியோ..

தனது நடிப்பு திறமை மூலம் தமிழ் சினிமாவில் தலை தூக்கிய நடிகர் தான் விக்ரம் இவர் சேது திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் உச்ச நட்சத்திரமாக விளங்கி விட்டார் என்றே கூறலாம். இந்தத் திரைப்படத்திற்கு முன்பு இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் தோல்வியை தழுவி கொண்டே இருந்தது இருப்பினும் அதனை கண்டுகொல்லாமல் இருந்த இவருக்கு சேது திரைப்படம் ஒரு வர பிரசாதம் போல் அமைந்து விட்டது.

இந்தத் திரைப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த நிறைய திரைப்படங்கள் இவருக்கு பெரிய வெற்றியை தந்துவிட்டது. அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் தற்பொழுதும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது இயக்குனர் மணிரத்னம் அவர்கள் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் ஒரு சினிமா பட்டாளமே நடித்திருக்கிறார்கள் என்றும் சொல்லலாம்.மேலும் விக்ரம் இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் மேக்கிங் வீடியோவை இன்று விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுருந்தார். அதனை தவிர்த்து சமீபத்தில் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட விக்ரம் மாஸாக வரும் பொழுது எடுத்த வீடியோவை அவரது ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்கள்.

அதிகமாக முடி வைத்துக் கொண்டிருக்கும் விக்ரம் மிகவும் மாஸாக நடந்து வரும்பொழுது எடுத்த வீடியோ போல் தெரிகிறது மேலும் இந்த வீடியோவில் நடிகர் விக்ரம் மிகவும் ஒல்லியாக இருக்கிறார் எனவும் ஒரு சில ரசிகர்கள் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version