தமிழ் சினிமாவில் தான் நடிக்கும் திரைப்படத்திற்காக தன்னையே மாற்றிக் கொண்டு நடிக்கும் ஒரு நடிகர் என்றால் அது விக்ரம் தான். அந்த வகையில் ஒவ்வொரு திரைப்படத்திற்கும் தேவையான அளவிற்கு உடல் எடையையும் தோற்றத்தையும் மாற்றி நடித்து வருகிறார்.
இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தமிழ் சினிமாவில் பல ஹிட் திரைப்படங்களை கொடுத்திருந்தாலும் சமீபத்தில் ஒரு ஹிட்டான திரைப்படத்தை கொடுக்க முடியாமல் தவித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் மகான் திரைப்படம்.
இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பாபிசிம்ஹா மற்றும் துருவ் விக்ரம் சிம்ரன் போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.
இணையத்தில் வெளியான இந்த திரைப்படமானது ரசிகர்களை பெருமளவு கவரவில்லை என்றே சொல்லலாம். மேலும் இந்த திரைப்படம் தோல்வி அடைவதற்கு நடிகர் விக்ரமும் ஒரு காரணம் என்று தெரியவந்துள்ளது. ஏனெனில் ஒரு திரைப்படம் ரசிகர்களின் கவனத்திற்கு கொண்டு செல்வது ப்ரோமோஷன் தான். ஆனால் அந்த ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் நயன்தாரா போன்றவர்கள் கலந்து கொள்வதே கிடையாது.
தற்போது அதேபோலதான் விக்ரமும் நடந்து வருகிறார் அந்தவகையில் ஒரு திரைப்படம் முடிந்த கையோடு அடுத்த திரைப்படத்திற்கான வேலையை பார்க்க ஆரம்பித்து விடுகிறார் இதனால் அவர் பொதுவெளியில் அதிகம் அளவு தென்படுவது கிடையாது.
இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் தான் நடிக்கும் திரைப்படத்திற்காக தன்னையே மாற்றிக் கொள்கிறார் விக்ரம் இதனால்தான் படத்தின் ரகசியம் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக மீடியாவின் முன் வருவதை முற்றிலுமாக தவிர்த்து விடுகிறார் அதனால்தான் அவரால் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் முடியவில்லை.
ஆனால் தற்போது இவர் நடித்துவரும் கோப்ரா திரைப்படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.