லியோ படத்தில் புதிதாக இணைந்த விக்ரம் பட வில்லன்.! எதிர்பார்ப்பை எகிற விடும் புதிய அப்டேட்…

leo
leo

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் திடீரென சமீபத்தில் படகுழு காஷ்மீரை விட்டு சென்னை திரும்பியது. இந்த நிலையில் காஷ்மீரில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை லியோ பட குழுவை சேர்ந்த ஒரு நபர் வெளியிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்ட புகைப்படத்தால் இணையதளமே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது நடிகர் விஜயின் 67வது திரைப்படமான லியோ திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா அவர்கள் நடித்து வருகிறார். 14 ஆண்டுகள் கழித்து விஜயும் திரிஷாவும் இணைந்துள்ளதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. மேலும் விஜய்யை தொடர்ந்து நடிகை திரிஷாவுக்கும் இது 67வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இந்த படத்தின் டைட்டில் பிரமோ சமீபத்தில் வெளியான நிலையில் அந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்கள் மத்தியில் பல விதமான யோசனையை கிளப்பி விட்டு இருக்கிறது.

அந்த வகையில் லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைய நிறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல் லியோ படத்தின் பூஜை வீடியோ சமீபத்தில் வெளியானது அந்த வீடியோவில் கைதி படத்தில் போலீசாக நடித்த நெப்போலியன் கதாபாத்திரம் அந்த பூஜையில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடித்த ஏஜென்டினா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான வசந்தி அவர்களும் படக்குழுவினருடன் காஷ்மீர் சென்றுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் இவர்கள் இருவரையும் கண்டுபிடித்து ரசிகர்கள் லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைந்திருக்கிறது என்று கூறி வந்தனர்.

இதனை தொடர்ந்து தற்போது மேலும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது அதாவது இந்த படத்தின் பட குழுவினர் ஒருவர் ஒரு கண் கண்ணாடியை வைத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதாவது அந்த கண்ணாடியை விக்ரம் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் சந்தானம் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது உபயோகப்படுத்திய கண்ணாடி என்று கூறி வருகிறார்கள்.

அதனால் விஜய் சேதுபதியும் லியோ திரைப்படத்தில் இணைந்து இருக்கிறார் என்றும் கூறி வருகிறார்கள் மேலும் இந்த திரைப்படம் எல்சியு-வில் இணைகிறது என்பது உறுதியாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

 இந்நிலையில் விஜய் சேதுபதி லியோ படத்தில் வருவார்போல என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சந்தானம் கேரக்டரும் லோகேஷின் எல்சியூவில் வரும் என ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.