கே ஜி எஃப் சாதனையை தும்சம் செய்ய வருகிறது விக்ரம்.! ரிலீஸ் ஆவதற்கு முன்பே இப்படியா.?

0
kamal-haasan-8
kamal-haasan-8

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் கமலஹாசன். இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

அதனைத் தொடர்ந்து இவர் சினிமாவில் 4 வருடங்களாக எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்க வில்லை அதன் பிறகு ‘விக்ரம்’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் நடிகர் கமலஹாசன்.  இந்த திரைப்படம் அடுத்த மாதம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, பகத்  பாசில், ஜெயராம் மற்றும்  அர்ஜுன் தாஸ் இவர்கள் அனைவரும் திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் விக்ரம் திரைப்படத்தின் பத்தல பத்தல பாடல்  மிக பிரம்மாண்டமாக இதுவரை இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த விக்ரம் திரைப்படத்தை புக் செய்வதற்கு ‘புக்மைக்ஷோ’ இணையதளத்தில் இரண்டு கோடி மேலாக விக்ரம் திரைப்படத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்கள். மேலும்  கே ஜி எஃப் திரைப்படத்தை விட கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விக்ரம் திரைப்படத்திற்கு அதிக அளவில் விருப்பங்களை பெற்று சாதனை படைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் கே ஜி எஃப் திரைப்படத்தை அசால்டாக தூக்கி வீசிடும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து வருகிறார்கள். மேலும் இந்த திரைப்படத்தின் வசூல் ரீதியாகவும் அதிக அளவில் எதிர்பார்க்கப்படும் என்று  கூறியுள்ளார்கள்.