லியோ படத்தில் இணைந்த விக்ரம் பட மாஸ் நடிகர்.! வெளிவந்த அப்டேட்டால் உற்சாகத்தில் ரசிகர்கள்..

leo
leo

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் இருந்து தற்போது வரையிலும் நான்கு திரைப்படங்கள் மட்டுமே இயக்கியிருந்தாலும் அந்த நான்கு திரைப்படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அனைத்து முன்னணி நடிகர்களும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க விரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் காஷ்மீரில் நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் தான் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. இந்நிலையில் பட குழுவினர்கள் சென்னை வந்துள்ளனர். எனவே அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் லியோ படம் எல்சியு அடிப்படையில் உருவாகிறதா? இல்லை தனி படமாகவே உருவாகிறதா?என்கின்ற கேள்விக்குறி எழுந்திருக்கும் நிலையில் இந்த படத்தின் பூஜையின் போது கைதி படத்தில் நடித்திருந்த மரியம் ஜார்ஜ் கலந்துக் கொண்டார். மேலும் காஷ்மீர் படப்பிடிப்பின் பொழுது விக்ரம் படத்தில் நடித்திருந்த ஏஜெண்ட் டீனாவாக நடித்த வசந்தியும் லியோ படத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இதனால் லியோ படம் எல்சியுவில் முறையில் உருவாகிறதா என்ற கேள்வி எழுந்தது இந்நிலையில் தற்பொழுது விக்ரம் படத்தில் அமர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் பகத் பாசிலும் விரைவில் லியோ படத்தில் கலந்துக் கொள்ள இருப்பதாக ஒரு சில தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் அவர் அமராகவே நடிக்க வருவதாக கூறப்பட்டிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக விக்ரம் திரைப்படம் வெளியான நிலையில் இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.