தமிழ் சினிமா உலகில் ஒரு சில கூட்டணி எப்பொழுதுமே வெற்றி கூட்டணியாக இருந்துள்ளது அந்த வகையில் விஜய் லோகேஷ் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணி. இவர்கள் இருவரும் இணைந்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி சாதனை படைத்தது
அதனைத் தொடர்ந்து மீண்டும் இந்தக் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்து உள்ளனர். லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது முதல் கட்ட ஷூட்டிங் சென்னையில் முடிந்ததை எடுத்து இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வந்தது ஒரு வழியாக அங்கு முடிந்து தற்பொழுது சென்னையில் தொடங்கப்பட இருக்கிறதாம்..
லியோ திரைப்படம் முழுக்க முழுக்க சர்வதேச போதை பொருளை மையமாகக் கொண்டு உருவாகுவதால் இந்த படத்தில் ஆக்ஷனுக்கு பஞ்சம் இல்லை என தெரிய வருகிறது படத்தில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன், ப்ரியா ஆனந்த், திரிஷா, பிக்பாஸ் ஜனனி என முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.
இப்படி இருக்கின்ற நிலையில் லியோ திரைப்படத்தில் மற்றொரு பிரபலம் இணைய உள்ளது உறுதியாகியுள்ளது அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல தென்னிந்திய சினிமா உலகில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் பகத் பாசில் தான் என சொல்லப்படுகிறது இதன் மூலம் லியோ திரைப்படம் LCU -வில் இணைவது உறுதியெனவும் சொல்லப்படுகிறது.
ஆனால் நடிகர் பகத் பாஸில் இணைவது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தகவல் வெகுவிரைவிலேயே வரும் என சினிமா வட்டாரங்கள் மத்தியில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த செய்தி தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில் காட்டு தீ போல பரவுகிறது.