அம்பியாக நடிக்கும் பொழுது வயிறு குண்டாக தெரிய வேண்டும் என்பதற்காக விக்ரம் இதை செய்வார்.! உண்மையை சொன்ன சங்கர்.

0

தமிழ் திரையுலகில் வித்தியாசமான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவராக விளங்குவர் நடிகர் விக்ரம். இவர் 1990ல் என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என தான் கூறவேண்டும்.

அந்த வகையில் இவர் ஏராளமான படங்கள் நடித்திருந்தாலும் 2005ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த அந்நியன திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமடைந்தார் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது இன்றளவும்  கூட. பொதுவாக ஷங்கர் இயக்கத்தில் வரும் அனைத்து படங்களும் சற்று வித்தியாசமாகத்தான் இருக்கும் இவர் தமிழ் திரையுலகில் 25 ஆண்டுகளாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அந்நியன் திரைப்படமும் மிகப் பெரிய வெற்றியை கண்டு வசூல் சாதனை படைத்தது. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியைத் தந்ததால் தெலுங்கு,ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு பிரபலமடைந்தது.

தற்பொழுது  இயக்குனர் சங்கர் ஒரு பேட்டியில் இப்படம் எடுத்து இன்று வரை 15 ஆண்டுகள் ஆகிவட்டது இப்படத்தின் போது பல இன்னல்களை சந்தித்தோம். முதலில் அந்நியன் கதையைப் பற்றி விக்ரமிடம் கூறும் பொழுத அவர் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தார் இப்படத்திற்கு நீங்கள் தயாராகுங்கள் என கூறினேன்.

அதன் பிறகு தான் விக்ரம் முடி வளர்க்க ஆரம்பித்தார் ஆனால் அவர் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் குறைவாகவே முடி இருந்தது எனவே சில இடங்களில் விக் வைத்து படம் எடுத்துவந்தோம் அதன்பிறகு முடி வளர்ந்தவுடன் ஒரிஜினல் முடியை வைத்து ஷூட்டிங் எடுத்தோம். அது மட்டுமல்லாமல் பெரும்பாலான ஐடியாக்களை இப்படத்தின் தந்தது விக்ரம் தான். இப்படத்திற்காக விக்ரம்வ பல முயற்சிகளை செய்தார்  அதாவது நடித்துக் கொண்டிருக்கும்போதே ஜிம் கிட்டை எடுத்துவந்து வொர்க் அவுட் செய்து கொண்டே இருப்பார்.

அதுமட்டுமல்லாமல் அந்த விசாரணை சீன் எடுக்கும் பொழுது மிகவும் கடினமாக இருந்தது. அம்பியாக நடிக்கும் பொழுது வயிறு குண்டாக தெரிய வேண்டும் என தண்ணீர் அதிகமாக குடித்துவிட்டு ஷூட்டிங் எடுக்க சொல்வார். இந்த கடின உழைப்பால் தான் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்துள்ளார்  விக்ரம். இவர் ஒரு கவிஞனுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார்.