விக்ரம்-துரு விக்ரம் நடிக்கும் திரைப்படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் யார் தெரியுமா.? இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!

chiyaan 60 announcement : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம் இவரின் மகன் துருவ் விக்ரம். இவர் முதன்முதலாக ஆதித்ய வர்மா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார், இதனைத்தடர்ந்து அடுத்ததாக தன்னுடைய அப்பா விக்ரமுடன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் அந்த தகவலை தற்பொழுது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள், விக்ரம் மற்றும் துரு விக்ரம் இணைந்து நடிக்கும் இந்த திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தான் இயக்க இருக்கிறார், கார்த்திக் சுப்புராஜ் தற்போது ஜகமே தந்திரம் என்ற திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் இந்த திரைப்படத்தை முடித்ததும் அடுத்ததாக சியான்60 திரைப்படத்தை தொடங்குவதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சியான் 60 திரைப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் கமிட்டாகியுள்ளார், இவர் முதன்முதலாக விக்ரம் திரைப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார், இதனை தன்னுடைய சமூக வலைதளத்தில் முதன்முறையாக விக்ரமுடன் இணைகிறேன் என்றும் மீண்டும் ஒரு சிறப்பான தரமான சம்பவம் என கூறியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித் குமார் தயாரிக்க இருக்கிறார், இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது, அதில் ஒரு போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் கையில் துப்பாக்கியுடன் அப்பா நீட்டுவது போலவும் அதை ஒரு குழந்தை பிடிப்பது போலவும் இருக்கிறது.

இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு

Leave a Comment