விக்ரமின் கோப்ரா ஷுட்டிங் அப்டேட், எங்கு நடக்குது தெரியுமா!!

தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். சிவாஜிகணேசன் கமல் ஆகியோர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர்கள். இவர்களைத் தொடர்ந்து அடுத்த கட்டத்தில் இருப்பவர் நடிகர் விக்ரம். தற்பொழுது அவர் வெற்றி பெற வேண்டிய ஒரு அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் என்பதே உண்மை. இவரது ரசிகர்கள் அவர்கள் நடிப்பில் பட்டையை கிளப்புவார் ஆனால் கதையை இன்னும் நன்றாக தேர்ந்தெடுத்தால் மிகப்பெரிய ஒரு வெற்றியை பெற்று விடலாம் என கூறி வருகின்றனர்.

விக்ரம் அவர்கள் கடைசியாக நடித்து வெளிவந்த படம் கடாரம் கொண்டான். இதனைத் தொடர்ந்து தற்பொழுது இமைக்கா நொடிகள் படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து அவர்கள் இயக்கத்தில் விக்ரம் அவர்கள் கோப்ரா என்ற படத்தில் நடித்துவருகிறார்.கோப்ரா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையதளத்தில் வெளியாகி மிகப்பெரிய சாதனை படைத்தது.

இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்க உள்ளனர் அதில் குறிப்பாக இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், ஸ்ரீனிதி ஷெட்டி, மற்றும் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளனர். இப்படத்தினை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஒளிப்பதிவு ஹரிஷ் கண்ணன் மற்றும் எடிட்டிங் புவன் சீனிவாசன் செய்கிறார்.

இப்பொழுது இப்படத்தின் படப்பிடிப்பு மிக தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது அதுவும் குறிப்பாக கேரளா மற்றும் கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படம் ரஷ்யாவில் 13 நாட்கள் எடுக்க உள்ளதாக படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

விக்ரம் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் இப்படம் அவருக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என இறைவனை பிராத்திக்கிறோம் எனவும் கூறியுள்ளனர்.

vikram
vikram

Leave a Comment