விட்டதை பிடிக்க மீண்டும் எழுந்து வந்த விக்ரம்.! ரணகளமாக வெளியாகிய தங்கலான் படத்தின் புதிய போஸ்டர்…

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விக்ரம் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கோப்ரா திரைப்படம் மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து தற்போது தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் அப்டேட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியாகி கொண்டே இருக்கும் நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம்ம வைரலாகி வருகிறது.

சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் பா ரஞ்சித். அவர்கள் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்களான் திரைப்படம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல் இது ஒரு வரலாற்று திரைப்படமாக உருவாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இதனை தொடர்ந்து தங்கலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது மட்டுமல்லாமல் தங்களான் படப்பிடிப்பின் போது நடிகர் விக்ரம் மற்றும் பட குழுவினர் இணைந்து ஜாலியாக இருந்த புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார் விக்ரம்.

இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் அவர்கள் மேலும் சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். கடைசியாக கொடுத்த தோல்வி திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தை எப்படியாவது வெற்றி படமாக கொடுக்க வேண்டும் என்று முழு வீச்சில் நடித்து வரும் விக்ரம் அவர்கள் மிரட்டலான லுக்கில் போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருவது மட்டுமல்லாமல் விக்ரம் ரசிகர்கள் பாஸ் இஸ் கம் பேக் என்றும் கூறி வருகிறார்கள். இதனை தொடர்ந்து நடிகர் விக்ரம் அவர்கள் நடித்துவரும் தங்கலான் திரைப்படத்தின் அடுத்தடுத்து அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ வந்த புகைப்படம்…

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment