விக்ரம் மட்டும் நடித்தாலே அதிரும் இதில் மகன் வேறையா!! அப்ப சீயானின் 60 ஆவது படம் செம்ம மாஸ் தான் போங்க!!

Vikram acting with his son on The 60th movie: தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகரான சியான் விக்ரம் தனது மகன் துருவ் நடித்த முதல் திரைப்படமான ஆதித்யா வர்மா என்ற திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்த்தார்கள். ஆனால் அவரோ ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதனால் அவரது ரசிகர்கள் பெரிதும் ஏமாற்றமடந்தனர்.

எனவே அந்த ஏமாற்றத்தை போக்கும் வகையில் தற்போது விக்ரமின் அறுபதாவது திரைப்படத்தில் அவரது மகன் துருவ் இணைந்து நடிக்க உள்ளார். திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் தகவல் வெளியானது. மேலும் இந்த திரைப்படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது.

அதுமட்டுமல்லாமல் விக்ரமின் 60 ஆவது திரைப்படத்தில் பெரிய நடிகர் ஒருவர் இணைய உள்ளதாக பேசப்பட்டு வந்தது. அவர் வேறு யாரும் இல்லை விக்ரமின் மகன் துருவ் என்று தற்போது செய்தி வெளியானது. இதை அறிந்த அவர்களின் ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விக்ரமே ஒரு படத்திற்காக தன்னை முழுவதும் மாற்றிக்கொண்டு நடிப்பதில் வல்லவர். அந்தவகையில் தற்போது அவரது மகனுடன் இணைந்து நடிக்கும்போது இன்னும் எப்படி இருக்குமோ என ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் தற்போது விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment