மீண்டும் விக்ரமுடன் இனைந்த ஏ.ஆர் ரகுமான் இதோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

0
Vikram-58
Vikram-58

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம், இவர் படத்தைப் பார்க்க ரசிகர்களுக்கு எப்போதும் ஆர்வம் அதிகம் ஏனென்றால் படத்தில் இவர் ஏதாவது ஒரு புதுவிதமாக நடித்திருப்பார். இவர் நடிப்பில் கடாரம் கொண்டான் திரைப்படம் வருகின்ற ஜூலை 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது இந்த திரைப்படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு பிறகு இன்னும் சில திரைப்படங்களில் விக்ரம் நடித்து வருகிறார், அதில் ஒன்று அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இது விக்ரமிற்கு 58ஆவது திரைப்படமாகும்.

இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது, இந்த திரைப்படத்திற்கு இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் கமிட்டாகியுள்ளார் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு.