உலகத்தையே ஆட்டிப் படைத்து வரும் வைரஸ் கொரோனா தாண்டவத்தில் இந்தியாவும் சிக்கியுள்ளது. இதற்காக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பல பிரபலங்கள், மத்திய மாநில அரசுகள் அடிக்கடி விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக மக்கள் அதிகமாக கூடும் மால்கள், திரையரங்குகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளது, மக்களும் இந்த வைரஸில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இவர் தற்பொழுது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை காதலித்து வருகிறார், இவர் படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் தயாரிப்பது பாடல் வரிகள் எழுதுவது என பல திறமைகளுடன் தமிழ் சினிமாவில் பணியாற்றிவருகிறார்.
தமிழ் சினிமாவில் தற்போதைய காதல் மன்னன் என்றால் விக்னேஷ் சிவன் தான், ஏனென்றால், அடிக்கடி நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று அடிக்கடி புகைப்படத்தை வெளியிடுவார்கள். இதனாலேயே விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார், இந்த திரைப்படம் நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் இரண்டாம் பாகம் என்பது குறிப்பிடத்தக்கது.
யாருடா இவரு நமக்கே டப் கொடுக்குறாரு.! #coronavirusindia https://t.co/wDB4IHQKee
— Tamil360Newz (@tamil360newz) March 19, 2020
இயக்குனர் விக்னேஷ் சிவன் வைரஸிலிருந்து நம்மளை பாதுகாத்துக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வடிவேல் காமெடி வீடியோவை வெளியிட்டுள்ளார், இதை பார்த்த ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு டஃப் கொடுப்பார் போல என கமெண்ட் செய்து வருகிறார்கள்.