சன் டிவியின் இந்த சீரியலில் தான் விஜய் சேதுபதி, அட்டகத்தி தினேஷ் இணைந்து நடித்தார்களா!! வைரலாகும் புகைப்படம்..

0
sethupathy
sethupathy

vijaysethupathy and attakathi dhinesh acting in sun tv serial photo and title viral: விஜய் சேதுபதி மற்றும் அட்டகத்தி தினேஷ் இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவிற்கு சீரியல், மற்றும் சினிமாவில் துணை கதாபாத்திரங்கள் என படிப்படியாக முன்னேறி தான் தற்போது ஒரு நடிகனாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அட்டகத்தி தினேஷ் மற்றும் விஜய்சேதுபதி இவர்கள் இருவருமே தற்போது கதாநாயகனாக பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

குறிப்பாக விஜய் சேதுபதி தற்போது வில்லன் மற்றும் ஹீரோ போன்ற கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் முன்னணி நடிகராக வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைதொடர்ந்து தற்போது விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க இருந்தார்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்  அதனால் படத்தில் நடிப்பதிலிருந்து விஜய்சேதுபதி விலகியுள்ளார். இந்தநிலையில் தற்போது விஜய் சேதுபதியின் மகளுக்கு ட்விட்டர் மூலம் பாலியல் அச்சுறுத்தல் வந்துள்ளது.

எனவே இதற்கு நிறைய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் என அனைவரும் பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் எனவே விரைவில் போலீசார் விஜய்சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த வரை பிடிப்பார்கள்  என தெரியவருகிறது. மேலும் விஜய்சேதுபதி இந்த 800 திரைப்படத்தில் நடிப்பதில் இருந்து விலகியதால் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

மேலும் விஜய் சேதுபதியும் அட்டகத்தி  தினேஷும் சினிமாவிற்கு வருவதற்கு முன் இருவரும் இணைந்து ஒன்றாக சன்டிவியில் நடித்த சீரியலின் பெயர் பெண். அந்த சீரியலில் இருவரும் எப்படி உள்ளார்கள் என பாருங்கள் இதோ அந்த புகைப்படம்.

dhinesh
dhinesh