அய்யயையோ!! முத்தையா முரளிதரனின் கதாபாத்திரத்தில் என்னால் நடிக்க முடியாது!! பிரபல நடிகர் அதிரடி அறிவிப்பு!! இதனால் விஜய்சேதுபதிக்கு புதிய சிக்கல்..

0

vijaysethupathy 800 movie issue: விஜய் சேதுபதி அவர்கள் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 800 திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியாகி விஜய் சேதுபதிக்கு எதிராக பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இந்த திரைப்படத்தில் இவர் நடிக்கக்கூடாது என ரசிகர்கள் திரைப்பிரபலங்கள் என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

முத்தையா முரளிதரன் ஒரு இலங்கை பந்துவீச்சாளர் என்பதாலும் இவர் ராஜபக்சேவின் ஆதரவாளர் என்பதாலும் இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி நடிக்க கூடாது என பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேலும் இது ஈழத் தமிழர்களுக்கு நாம் செய்யும் துரோகம் எனவும் மக்கள் கூறி வருகின்றனர்.

இந்தநிலையில் அசுரன் திரைப்படத்தில் நடித்திருந்த டிஜே அருணாச்சலம் என்பவரிடம் இளம் வயது முத்தையா முரளிதரனாக நடிப்பதற்கு கேட்டுள்ளனர். ஆனால் இவரோ ஈழத்தமிழரை மனதில் வைத்துக்கொண்டு நடிக்க முடியாது என மறுத்து விட்டாராம்.

மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு இளம் வளரும் நடிகர் நடிக்க மறுத்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதி  நடிக்க ஏற்றுக்கொண்டது மிகப்பெரிய தவறு என ரசிகர்கள் பெரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இதற்கு மேல் அவர் எத்தனை திரைப்படம்  நடித்தாலும் இனி ஓடாது எனவும் அழுத்தமாக கூறி விட்டனர்.

இதனால் விஜயின் மாஸ்டர் திரைப்படத்திற்கு ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ என பயத்தில் படக்குழு உள்ளது.