சண்டைக்காட்சியில் மிரட்டும் குட்டி விஜய் சேதுபதி..! வெளியான ஸ்டண்ட் வீடியோவால் மிரண்டு போன ரசிகர்கள்..!

கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்பை வைத்துக் கொண்டு பிஸியாக இருப்பவர் தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிப்பது மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து மிரட்டி உள்ளார்.

தற்போது விஜய்சேதுபதி திரைப்படங்களை நடிப்பது மட்டும் இல்லாமல் பல்வேறு தொடர்களிலும் பொது நிகழ்ச்சிகள் மற்றும் சமையல் நிகழ்ச்சி என பல்வேறு வழியில் தன்னுடைய திறனை வெளிகாட்டி வருகிறார்.  அந்த வகையில் இவர் சென்ற இடமெல்லாம் இவருக்கு வெற்றிதான்.

இந்நிலையில் தான் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பொழுது தன்னுடைய மகனையும் சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார். அந்த வகையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா அவர்கள் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளிவந்த சிந்துபாத் என்ற திரைப்படத்தில் கூட அவருடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது விஜய்சேதுபதி போல வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து குட்டி விஜய் சேதுபதியும் அசத்தி வருகிறாராம்.

அந்தவகையில் மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான கோகுல்நாத் அவர்கள் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.  அப்பொழுது சண்டைக்காட்சி ஒன்றை ஸ்டன்ட் போல செய்து அசத்தி உள்ளார்கள்.

இவ்வாறு அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எதிர்காலத்திற்கு தன்னை தற்போது ஆயுத படுத்தி வருகிறார் என விஜய் சேதுபதியின் மகனை ரசிகர்கள் புகழ்ந்து தள்ளி வருகிறார்கள் அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி தற்போது எப்படி சினிமாவில் கெத்து காமிக்கிறார் அதே போல அவருடைய மகனும் கெத்து காண்பிப்பார் என ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Leave a Comment