மாஸ்டர் திரைப்படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த விஜய்சேதுபதிக்கு பிசாசு 2வில் இப்படி ஒரு கதாபாத்திரமா..? என்ன கொடுமை சார் இது..?

vijaysethupathi pisasu movie role: தற்போது சினிமாவில் நடிகர்களுக்காக திரைப்படம் பார்த்த காலம் மாறி இயக்குனர் களுக்காக படம் பார்க்கும் காலம் வந்து விட்டன. அந்த வகையில் சமீபத்தில் பல மெகா ஹிட் படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக முன்னிலை வகிப்பவர் தான் இயக்குனர் மிஷ்கின்.

ஏனெனில் இவர் இயக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கதை அம்சம் உள்ளது மட்டுமல்லாமல் மிகவும் வித்தியாசமான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுக்கும் இதன் காரணமாகவே மிஷ்கின் திரைப்படம் வெளி வந்தாலே போதும் தியேட்டரில் கூட்டம் அலை மோதும்.

அந்தவகையில் கடைசியாக மிஷ்கின் இயக்கிய சைக்கோ திரைப்படம் ஆனது நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்துகட்டிய நிலையில் மிஷ்கின் தான் இயக்கிய திரைப்படத்தின் இரண்டாம் பாகமான பிசாசு திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரமாக அமைந்துள்ள ஒரு கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளாராம் ஆனால் அது எந்த மாதிரி கேரக்டர் என்பது புரியாத புதிராகவே இருந்து வந்தனர் இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி ஆண்ட்ரியாவின் கணவராக நடித்துள்ளார் என கூறப்படுகிறது. ஆனால் அது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என சமீபத்தில் அதற்கான விடை வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு பேய் ஓட்டும் சாமியாராக நடித்துள்ளாராம்.

மாஸ்டர் திரைப்படத்தின் மூலமாக மாபெரும் வில்லனாக அவதாரம் எடுத்த நம்ம விஜய் சேதுபதியை சாமியார் வேஷம் போட்டு ஊர் ஊராக அலைய வைத்துள்ளார் மிஷ்கின் இதுபோன்று யோசனை எல்லாம் இவருக்கு மட்டும் தான் வரும் போல என ரசிகர் வட்டாரத்தை பேசி வருகிறார்கள்.

pissasu
pissasu
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment