அஜித்தை போல் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் சேதுபதி.! செம மாஸான புகைப்படம்.!

vijay sethupathi new look photos viral photos : தன்னுடைய எதார்த்தமான நடிப்பால் பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி இவர் தன்னுடைய திரைப்படத்திற்காக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது மட்டுமல்லாமல் அந்த கதாபாத்திரமாகவே தன்னை மாற்றிக்கொண்டு நடித்து வருபவர்.

அப்படி விஜய் சேதுபதி ஒவ்வொரு திரைப்படத்திற்கும் போடும் கெட்டப்கள் பிரபலமாகி வந்த நிலையில், தற்பொழுது லாக் டவுனில் நரைத்த முடியுடன் நரைத்த தாடியுடன் இருக்கும் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

விஜய் சேதுபதி அந்த புகைப்படத்தில்  சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித்தை போல் செம கெத்தா இருக்கிறார், இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரல் ஆகி வருவது மட்டுமல்லாமல் பல ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்க வைத்துள்ளது.

விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா திரைப்படம் ஹிந்தியிலும் ரீமேக் செய்ய இருக்கிறது, அதுமட்டுமில்லாமல் விஜய் சேதுபதி விஜய் உடன் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார், மாஸ்டர் திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக பலர் கூறுகிறார்கள்.

மேலும் விஜய்சேதுபதி பி ஜனநாதன் இயக்கத்தில் நடித்து வரும் லாபம் திரைப்படத்தின் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் அதுமட்டுமல்லாமல் யாதும் ஊரே யாவரும் கேளிர், கடைசி விவசாயி, காத்துவாக்குல இரண்டு காதல் என பல தமிழ் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

vijay-sethupathi-latest-tamil360newz
vijay-sethupathi-latest-tamil360newz
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment