#shame on vijaysethupathi இதுதான் உங்களுக்கு கடைசி படம்!! விஜய் சேதுபதிக்கு எதிராக குவியும் டுவீட்கள்!!காரணம் இது தான்..

vijaysethupathi fans are against him for his 800 muthiah muralidharan biopic movie: மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி தற்போது கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரணின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் அந்தத் திரைப்படத்திற்கு 800 என டைட்டில் வைத்துள்ளனர். இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ நேற்று வெளியானது.

அதனை தொடர்ந்து தற்போது புதிதாக ஒரு பூகம்பம் வெடித்துள்ளது. இந்த திரைப்படத்தில் இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு, துப்பாக்கி சூடு போன்றவை இடம் பிடித்தது பெரும் சர்ச்சையை எழுப்பியது. அதுமட்டுமல்லாமல் முத்தையா முரளிதரன் அவர்கள் ஈழத்தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவின் ஆதரவாளர் எனவும் பேசப்படுகிறது.

முத்தையா முரளிதரன் தமிழர்களுக்கு எதிராக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது. விஜய்சேதுபதி முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தால் இதுவே அவரது கடைசி படமாக இருக்கும் எனவும் இதற்கு மேல் அவர் எந்த ஒரு திரைப் படத்திலும் நடிக்க முடியாது எனவும் கூறி வருகின்றனர்.

அதோடு இந்த திரைப்படத்தை அவர் நடிக்க கூடாது என எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் #shame on vijay  sethupathi என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரை மிகக் கொடூரமாக மக்கள் செல்வன் இல்லை மாக்கள் செல்வன் என பதிவிடுகின்றனர்.

மேலும் நெட்டிசன்கள் திருந்துங்கள் சேதுபதி இல்லையேல் திருத்தப்படுவிற்கள் என எச்சரித்துள்ளனர்.

tweet3-1602668613
tweet3-1602668613
tweet8
tweet8
tweet1
tweet1

Leave a Comment