புதிய பிரச்சனையை சந்தித்துள்ள விஜயின் “வாரிசு” – எப்ப வேண்டுமானாலும் ஷூட்டிங் நிறுத்தப்படும்.!

நடிகர் விஜய் தனது 66-வது திரைப்படமான வாரிசு என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் குடும்ப செண்டிமெண்ட், ஆக்சன், திரில்லர் போன்ற அனைத்தும் கலந்த படமாக உருவாகி வருகிறது. வாரிசு படத்தில் முதல் முறையாக விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

அவரைத் தொடர்ந்து வாரிசு படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார், அம்மாவாக ஜெயசுதா, அண்ணனாக ஷாம் மற்றும் யோகி பாபு, குஷ்பூ, பிரபு, சங்கீதா போன்ற பல நடிகர் நடிகைகளும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். வாரிசு படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தில் ராஜு தயாரித்து வருகிறார். இந்த நிலையில் ஆந்திராவில் வெளியாகும் தெலுங்கு திரைப்படங்கள் பெரும்பாலும்  தோல்வி அடைகின்றன.

அதற்கு முக்கிய காரணம் திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்கள் அடுத்து ஓரிரு வாரங்களிலேயே ஓடிடி தளத்தில் வெளியாகுவது தான் இதற்கு காரணம் என தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர். இதனால் ஒரு திரைப்படம் திரையரங்கில் வெளியாகிய 10 வாரங்கள் கடந்த பிறகு தான் ஓடிடி யில் வெளியாக வேண்டும் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் திரைப்படங்களின் தயாரிப்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளனர்.

ஆனால் தில்ராஜுவின் வாரிசு திரைப்படம் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்து வருகின்ற நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வாரிசு படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது அதனால் நீங்களும் படப்பிடிப்பை நிறுத்த வேண்டும் எனக் கூறினர். இதற்கு பதில் அளித்த தில் ராஜு வாரிசு படம் தமிழ் படம் தான்.

இந்த படம் தமிழில் எடுக்கப்பட்டு பின்பு வரசுடு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தான் தெலுங்கில் வெளியாகும் என்பது போல் கூறி இருக்கிறார். இருந்தாலும் இதனை தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் ஏற்க மறுக்கின்றன அதனால் படத்தின் படப்பிடிப்பு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் என சொல்லப்படுகிறது.

Leave a Comment