முக்கிய இடத்தில் கிழிந்து தொங்கும் விஜயின் வாரிசு பேனர் – ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்..

varisu
varisu

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடுபவர் தளபதி விஜய். இவர் அண்மைக்காலமாக நடிக்கும் படங்கள்  வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்த போதிலும் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளி அசத்தியது.

அதனைத் தொடர்ந்து தற்போது தனது 66-வது திரைப்படமான வாரிசு திரைப்படத்தில் வெற்றிகாராமாக நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலை கூறி வைத்து ரிலீஸ் ஆக இருக்கிறது வாரிசு படத்தில் தளபதி விஜய் மிகப்பெரிய ஒரு கோடீஸ்வரராக நடித்துள்ளார் அவருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள்  படத்தில் நடித்துள்ளனர்.

படம் வெளி வருவதற்கு முன்பாகவே ரசிகர்களை தான் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வாரிசுப் படக்குழு தொடர்ந்து எதிர்பார்க்காத அப்டேட்டுகளை கொடுத்து அசத்தி வருகிறது அந்த வகையில் பர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வைரல் ஆகி வந்த நிலையில் அடுத்ததாக ரஞ்சிதமே ரஞ்சிதமே முதல் சிங்கிளை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது அது வேற லெவலில் ட்ரெண்டானது.

அதன் பிறகு சிம்பு பாடிய இரண்டாவது சிங்களான தீ தளபதி பாடலும் வைரலானது இப்படி ஓடிக் கொண்டிருக்க மறுப்பக்கம் இப்பொழுது பல்வேறு திரையரங்குகளில் வாரிசு படத்தின் பேனர் மற்றும் கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன அதன் புகைப்படங்கள் கூட அண்மையில் வைரலானது இப்படி இருக்கின்ற நிலையில் பல்வேறு இடங்களில் வாரிசு படத்தின் பேனர்கள் கிழிக்கப்பட்டு இருக்கின்றன.

காரணம் தமிழகத்தில் பல்வேறு முக்கிய இடங்களில் மழை பெய்தது மேலும் பலத்த காற்றும் வீசியது இதனால் பேனர்கள் கிழிந்தன குறிப்பாக சென்னையில் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள் நாசமாகிய அதில் ஒன்றாக வாரிசு படத்தின் பேனர்கள் கிழிந்து தொங்கும் புகைப்படங்கள் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள்.

varisu
varisu