விஜய்க்கு மாமா வேலை பார்த்த அப்பா.! அவரே சொன்ன உண்மை தகவல்…

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தெலுங்கு திரைப்பட இயக்குனருடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து தளபதி 67 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தளபதி 67 திரைப்படத்திலிருந்து இதுவரைக்கும் எந்த ஒரு அப்டேட் வெளியாகாமல் இருந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட் தான் சமுக வலைதளத்தில் தீயாக பரவி வருகிறது.

அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் உடன் யார் யார் நடிக்கிறார்கள் என்ற லிஸ்ட்டை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து பிரியா ஆனந்த், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள் என்று சமீபத்தில் பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விஜயின் அப்பா சந்திரசேகர் சித்ரா லட்சுமணனின் youtube சேனலுக்கு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார் அதில் விஜய் பற்றி பல சுவாரசியமான விஷயங்களை பேசி உள்ளார். அதில் விஜய் நடித்த படத்தில் உங்களுக்கு எந்த படம் மிகவும் பிடிக்கும் என்று சித்ரா லட்சுமணன் கேட்டிருந்தார் அதற்கு எஸ் எஸ் சி பதிலளித்துள்ளார் அதாவது எனக்கு விஜய் நடிப்பில் வெளியான ரசிகன் படம் மிகவும் பிடிக்கும் என்று கூறியிருந்த.

அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ஒரு புல் என்டர்டைன்மென்ட் திரைப்படமாக அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த படத்தை பார்த்து விட்டு பல ரசிகர்கள் அப்பனே மகனுக்கு மாமா வேலை பார்க்கிறான் என்று திட்டி உள்ளதாக கூறியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment