தெறி திரைப்படத்தில் குட்டி தளபதியா.? பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ.!

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக தன் திரைப்பயணத்தில் நல்ல நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருபவர் தான் இளைய தளபதி விஜய் இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் பார்த்தால் இவரது நடிப்பில் இறுதியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் வசூல் மட்டும் அல்லாமல் ரசிகர்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று விட்டது என்று தான் கூற வேண்டும் அந்தளவிற்கு இந்த திரைப்படத்தில் இளையதளபதி விஜய்யின் நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

மேலும் தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எங்கு நடத்தலாம் என படக்குழு யோசித்து வருகிறது.

இளைய தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படமாக அமைவது தெறி திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு அட்லி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி விட்டது என்று தான் கூற வேண்டும்.மேலும் இந்த திரைப்படத்தில் மீனாவின் மகள் நைனிகா இளையதளபதி விஜய்யின் மகளாக நடித்து இருப்பார் ஆனால் கிளைமாக்ஸ் காட்சியில் மட்டும் விஜயின் உண்மையான மகள் திவ்யா ஷாஷா நடித்திருப்பார்.

theri
theri

இந்நிலையில் இந்த திரைப்படத்தில் இருந்து புதிதாக ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது ஆம் மொட்டை ராஜேந்திரன் உடன் இளையதளபதி விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய் படப்பிடிப்பு தளத்தில் கலந்து கொண்டுள்ளார்.மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த இளையதளபதி விஜயின் ரசிகர்கள் பலரும் தளபதி போலவே அவரது மகனும் மிகவும் அழகாக இருக்கிறார் என்று கூறி இந்த புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment