சினிமா உலகில் உச்சத்தைத் தொட ஒவ்வொரு நடிகர்களும் போராடுகின்றனர் அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் ரஜினியின் நம்பர் 1 இடத்தை பிடிக்க பல நடிகர்கள் முட்டிமோதி கொள்கின்றனர். தமிழ் சினிமா உலகில் இருக்கும் ஒவ்வொரு நடிகரும் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகும் போது அந்த படம் வெற்றி பெற்றதா.. தோல்வி அடைந்ததா..
என்பதை தெரிந்துகொள்ள ரொம்ப கஷ்டப் படுகிறார்கள் ஆனால் ஒரு சிலரோ தனது படம் வெற்றி / தோல்வி என்பதை ஈஸியாக அறிந்து கொள்கின்றனர் அது குறித்து விலாவாரியாக தற்பொழுது பார்க்கலாம். சினிமா உலகில் ஒரு படம் வெளியாகி விட்டால் அந்த படத்தின் பட்ஜெட்டை தாண்டி அந்த படம் வசூல் ரீதியாக 200 கோடி 300 கோடி அள்ளியதாக் பல விமர்சகர்கள், பத்திரிகை செய்திகள் வெளிவருகின்றன.
ஆனால் உண்மையான செய்திகளை அறிந்து கொள்வது என்பது தற்பொழுது ரொம்ப கஷ்டமாக போய் விடுகிறது ஆனால் அதை ஒரு சில நடிகர்கள் ஈசியாக கண்டுபிடித்து விடுகின்றனர் விநியோகஸ்தரகளிடம் போன் செய்து அந்ததெந்த ஏரியாவில் எவ்வளவு வசூல் செய்தது எவ்வளவு நாள் ஓடியது என்பதை தெரிந்து கொள்கின்றனர் அந்த வகையில் சினிமா வினியோகஸ்தர், பைனான்சியர் திருப்பூர் சுப்பிரமணியன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியது :
என்னிடம் பலர் கேட்பார்கள் இதுகுறித்து கேட்பார்கள். நான் உள்ளதை உள்ளபடி சொல்லி விடுவேன். குறிப்பாக விஜய். விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகர் எனக்கு ரொம்ப நெருக்கமானவர் அதனால் விஜய்யும் எனக்கு நல்லா பழக்கப்பட்டவர். அவரது படம் ரிலீஸானால் போதும் விஜய் உடனடியாக எனக்கு போன் செய்து படத்தின் ரிசல்ட் எப்படி இருக்கிறது வெற்றியா.. தோல்வியா..
என கேட்பார் நானும் எதையும் மறைக்காமல் உள்ளதை உள்ளபடி சொல்லிவிடுவேன் அப்படித்தான் ஆரம்பகால கட்டத்தில் இருந்தது ஆனால் இப்பொழுது எல்லாம் தலை கீழாக மாறிவிட்டது விஜய் இப்பொழுது போன் செய்வது இல்லை வேறு எப்படியோ தெரிந்து கொள்கிறார். எனக்கு ஃபோன் பண்ணுவது இல்லை என தெரிவித்தார்.