விஜயின் மக்கள் இயக்கம் கட்சியாக மாறி 2026 தேர்தலில் களம் காண வாய்ப்பு இருக்காம்.? அடிச்சி சொல்லும் தயாரிப்பாளர்.

தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 நடிகர் என்ற இடத்தை பிடிக்க தற்போது போராடிவரும் தளபதி விஜய். தொடர் ஹிட் படங்களை கொடுத்து அதற்கான வேலையில் இறங்கியுள்ளார்.

மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து தனது 65வது திரைப்படத்தில் கமிட்டாகி தற்போது நடித்து வருகிறார் முதல்கட்ட ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவேற்றிய நிலையில் தற்போது இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக மிகப் பெரிய மால் போன்ற ஒரு சட்டையை உருவாக்க உள்ளனர்.

இப்படி ஒரு பக்கம் இருக்க டாப் நடிகர் நடிகைகள் இந்த படத்தில் கமிட்டாகி வருகிறது படக்குழு. அந்த வகையில் இந்த படத்தில் லேட்டஸ்டாக செல்வராகவன்,  ஜான் ஆபிரகாம் ஆகியோர் களத்தில் இறங்கி உள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளரான கே ராஜன் பேட்டி ஒன்றில் விஜயை பற்றி குறிப்பிட்டு பேசியுள்ளார் அவர் கூறியது வருகின்ற 2026 தேர்தலில் விஜய் நிச்சயம் தேர்தல் களத்தில் இறங்குவார் என வெளிப்படையாக கூறியுள்ளார்.

இச்செய்தி விஜய் ரசிகர்களை சந்தோஷம் அடைய செய்துள்ளது ஆனால் சாதாரண மக்கள் மற்றும் பிரபலங்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது இந்த செய்தி.

ஆனால் இவரது மக்கள் இயக்கம் எப்பொழுது வேண்டுமானாலும் அரசியல் களத்தில் குதிக்க வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் சமீபகாலமாக சந்திரசேகர் மக்கள் இயக்கம் ஒருநாள் கட்சியாக மாறும் என குறிப்பிட்டார் அது போல வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில்  வாய்ப்பு இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment