மக்கள் அதிகம் விரும்பி பார்த்த விஜயின் திரைப்படங்கள்.. எந்த படம் டாப் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஜொல்லிப்பவர் தளபதி விஜய். இவர் அண்மை காலமாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார் அந்த வகையில் கடைசியாக நடித்த வாரிசு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க இளம் இயக்குனர் லோகேஷ் உடன் கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின்  இரண்டாவது கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிர் என்று கொடு பார்க்காமல் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. படம் ஹோலிவுட் ரேஞ்சிக்கு மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருகிறது. மேலும் படத்தில் விஜய் ஒரு வயதான கெட்டப்பில் நடிக்கிறார் என கூறப்படுகிறது.

அவருடன் கைகோர்த்து சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், திரிஷா மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க லியோ படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சுமார் 400 கோடி கிட்டத்தட்ட வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது நிச்சயம் வெளிவந்து ஆயிரம் கோடி வசூல் செய்யும் என  தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட விஜய் திரைப்படங்கள் எது என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது தமிழ்நாட்டில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று “கில்லி”.. அந்த சமயத்தில் சுமார் 1.25 கோடி மக்கள் இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்து உள்ளனர்.

அடுத்ததாக திருப்பாச்சி 1.5 கோடி மக்கள் தமிழ்நாட்டில் பார்த்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து துப்பாக்கி 1 கோடி மக்கள், போக்கிரி 97 லட்சம் மக்கள், பிகில், சிவகாசி 92 மற்றும் மெர்சல், வாரிசு, சர்க்கார், மாஸ்டர் போன்ற படங்கள் 90 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இந்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியா பக்கத்தில்.

Leave a Comment